Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொமான்ஸில் இறங்கிய டேவிட் வார்னர்.. பாகிஸ்தான் தொடரில் வேடிக்கை சம்பவம்.. இணையத்தை கலக்கும் வீடியோ!

லாகூர்: டெஸ்ட் போட்டியின் போது வார்னர் - சாஹீன் அஃப்ரிடி ரொமான்ஸ் செய்ததாக வெளியான வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதல் 2 போட்டிகளும் டிராவில் முடிவடைந்த நிலையில் 3வது போட்டி லாகூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வார்னரின் சேட்டை

வார்னரின் சேட்டை

இந்த போட்டியை காண வந்த ரசிகர்களை விட, டேவிட் வார்னர் செய்யும் சேட்டைகளை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டம் வந்துக்கொண்டிருக்கிறது. பொதுவாக டிக்டாக்கில் மட்டும் வேடிக்கை காட்டி வந்த வார்னர், இந்த தொடரில் மைதானத்திலேயே தனது நடனம், பாட்டு திறமை என அனைத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். இது போட்டியை மேலும் சுவாரஸ்யமாக்கியது.

வேடிக்கை சம்பவம்

வேடிக்கை சம்பவம்

இந்நிலையில் தற்போது ஒருபடி மேல் சென்று ரொமான்ஸிலும் குதித்துவிட்டார் போல. ஆட்டத்தின் 3வது நாளான நேற்று வார்னர் தான் களத்தில் இருந்தார். நாளின் கடைசி பந்தை சாஹீ அஃப்ரிடி பவுன்சராக வீச, அதனை வார்னரால் ரன்களாக மாற்ற முடியவில்லை. இதனையடுத்து நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த உஸ்மான் கவாஜாவிடம், சிங்கிள் ஓட வேண்டாம் என ஆக்ரோஷமாக கத்தினார்.

சூப்பர் போஸ்

சூப்பர் போஸ்

அதை பார்த்து வார்னரின் அருகே சென்ற சாஹீன் அஃப்ரிடி முறைத்து பார்த்தார். மிகவும் உயரம் குறைவாக இருந்த வார்னரோ, டஃப் கொடுத்து மேல் நோக்கி அஃப்ரிடியை முறைத்தார். இருவரும் மிக நெருக்கமாக சில விநாடிகள் நின்றுவிட்டு, சிரித்தபடியே சென்றுவிட்டனர். எனினும் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை எடிட் செய்து இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Recommended Video

IPL 2022 Auction: Delhi Capitals SWOT Analysis | Aanee Cricket | OneIndia Tamil
மீண்டும் அவுட்

மீண்டும் அவுட்

இன்று தொடங்கிய 4ம் நாள் ஆட்டத்தில் டேவிட் வார்னர் 51 ரன்களுக்கு அவுட்டானார். அவரை சாஹீன் அஃப்ரிடி தான் ஸ்டம்ப் அவுட்டாக்கி வெளியேற்றினார். இவர்கள் இருவரும் போட்டியின் போது செய்யும் லூட்டிகள், செல்ஃபிகள், பாகிஸ்தான் பரபரப்புகளை மறக்கடித்து, விளையாட்டு அனைவரையும் ஒன்றிணைக்கும் என காட்டியுள்ளது.

Story first published: Wednesday, April 6, 2022, 11:41 [IST]
Other articles published on Apr 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+