Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னய்யா குரளி வித்தையா இருக்கு.. நாடி நரம்பெல்லாம் டிக்டாக் வெறி ஊறிப் போய் வார்னர் செய்த காரியம்!

சிட்னி : டிக்டாக் சமூக வலைதளத்தை கலக்கி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், சமீபத்தில் ஒரு குரலி வித்தை வீடியோவை போட்டு வைரல் ஆகி உள்ளார்.

டேவிட் வார்னர் லாக்டவுன் நேரத்தில் தொடர்ந்து டிக்டாக்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அவரது புதிய வீடியோவில் பேட்டிங் பயிற்சி செய்வது போலவும், நடுவே திடீரென மனைவி, குழந்தைகளுக்கு பயந்து போய் மாயமாய் மறைவது போலவும் வீடியோ செய்துள்ளார்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரு மாதங்களாக எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை. கடைசி கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே மார்ச் 13 அன்று நடைபெற்றது. அதன் பின் ஐபிஎல் உட்பட அனைத்து முக்கிய கிரிக்கெட் தொடர்களும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

லாக்டவுனில் வார்னர்

லாக்டவுனில் வார்னர்

டேவிட் வார்னர் கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் லாக்டவுனில் இருக்கிறார். கடைசியாக நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் டேவிட் வார்னர் ஆடி இருந்தார். அதன் பின் ஐபிஎல் தொடரில் ஆட ஆவலாக இருந்தார்.

டிக்டாக் செய்த வார்னர்

டிக்டாக் செய்த வார்னர்

எனினும், ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து வீட்டில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருந்த அவர் பொழுதை போக்க டிக்டாக் சமூக வலைதளத்தை பயன்படுத்த துவங்கினார். அதற்குள் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவரி பின்தொடர்ந்து வருகிறார்கள்.

சினிமா பாடல்கள்

சினிமா பாடல்கள்

முன்னதாக புட்டபொம்மா என்ற தெலுங்கு பாடலுக்கு நடனம் ஆடி சுமார் 6 கோடி பார்வைகளை பெற்று மிரட்டினார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு., ஹிந்தி சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடி இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

குரளி வித்தை

சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோவில் குரளி வித்தை செய்து காமெடி செய்துள்ளார். அந்த வீடியோவில் மனைவி, குழந்தைகள் இல்லாத போது வீட்டில் பந்து இல்லாமல் ஷேடோ பேட்டிங் பயிற்சி செய்து வருகிறார்.

மாயமாய் மறைந்த வார்னர்

மாயமாய் மறைந்த வார்னர்

பின்னர், மனைவி, குழந்தைகள் வீட்டிற்கு வந்து விட்டார்கள் என்பதை அறிந்த அவர், எங்கே தான் வீட்டிலும் பேட்டிங் பயிற்சி செய்வதை கண்டு திட்டு விழுமோ என பயந்து போய் மாயமாய் மறைகிறார். இதுதான் அந்த டிக்டாக் வீடியோ.

டிக்டாக் மன்னன்

டிக்டாக் மன்னன்

இந்த குரளி வித்தை வீடியோவும் டிக்டாக்கில் வைரல் ஆகி உள்ளது. இந்தியா சினிமா பாடல்கள் அளவுக்கு இது வைரல் ஆகவில்லை என்றாலும் 11 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. தான் ஒரு டிக்டாக் மன்னன் தான் என மீண்டும் நிரூபித்துள்ளார் டேவிட் வார்னர்.

Story first published: Monday, May 25, 2020, 20:39 [IST]
Other articles published on May 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+