பேட்டை எடுத்து ஒரே அடி.. நடுவரை அசிங்கமாக திட்டிய டேவிட் வார்னர்.. அவுட் தந்ததால் ஆத்திரம்
லக்னோ : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
நிஷாங்கா 61 ரன்களும், குசல் பெரேரா 78 ரன்களும் எடுக்க நடு வரிசையில் அசலங்கா மட்டும் 25 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இதனால் 157 ரன்களுக்கு ஒரு விக்கெட் இருந்த இலங்கை அணி 209 ரன்கள் எடுப்பதற்குள் எஞ்சிய அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. ஆஸ்திரேலிய அணி நடப்பு உலகக் கோப்பையில் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கிறது.
இதனால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கியது. இன்னும் சொல்லப்போனால் ஆஸ்திரேலிய உலக கோப்பை வரலாற்றில் தொடர்ந்து நான்கு போட்டிகளை தோல்வி தழுவி இருக்கிறது. இந்த தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற வெறியுடன் ஆஸ்திரேலியா இன்றைய ஆட்டத்தில் விளையாடியது.
குறிப்பாக டேவிட் வார்னர் சிக்சர் அடித்து தன்னுடைய இன்னிங்சை அதகளப்படுத்தினார். ஆனால் ஆட்டத்தின் 3.1வது ஓவரில் மதுசங்கா வீசிய பந்து வார்னரின் காலில் பட்டது.ஆனால் இதற்கு கள நடுவர் அவுட்டு வழங்கினார். இதன் அடுத்து வார்னர் ரிவ்யூ செய்தார். அப்போது பந்து ஸ்டெம்பின் ஓரத்தில் பட்டது போல் கிராபிக்ஸ் காட்சியில் காட்டப்பட்டது. ஆனால் இது அவுட்டா இல்லையா என்பதை கள நடுவர் என்ன சொல்கிறாரோ அதுதான் இறுதியாகும்.
ஏனெனில் பந்து நன்றாக ஸ்டெம்பில் படவில்லை. ஒருவேளை இதனை கள நடுவர் அவுட் இல்லை என்று கூறி இருந்தால், இது அவுட் இல்லாமல் போயிருக்கும்.ஆனால் கள நடுவர் அவுட் என கூறிவிட்டதால் ரிவ்யூ எடுத்தும் பயனில்லாமல் போய்விட்டது. இதனால் கடுப்பான டேவிட் வார்னர் பேட்டை எடுத்து தரையில் ஓங்கி அடித்தார். அதன் பிறகு நடுவரை பார்த்து திட்டிக் கொண்டே டேவிட் வார்னர் சென்றார். வார்னரின் கோபம் ஒரு நிமிடம் அங்கு இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


Click it and Unblock the Notifications