Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"என்ன ஸ்கூல் பசங்க மாதிரி பண்றீங்க.." பாகிஸ்தான் வீரர்கள் செயலால் ஆவேசமடைந்த டேவிட் வார்னர்

லாகூர்: 2026 பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் தொடங்க உள்ள நிலையில், லாகூரில் நடைபெற்ற கேப்டன்களுக்கான செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் டேவிட் வார்னர், பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்து பள்ளிக்கூட சிறுவர்கள் என கடுமையாக விமர்சித்துள்ள வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் கடந்த மார்ச் 25 அன்று பிஎஸ்எல் தொடரில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனான 39 வயதான டேவிட் வார்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது மேடையில் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பாகிஸ்தான் வீரர்களான முகமது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிடி, சவுத் ஷகீல் மற்றும் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசேன் ஆகியோர் தங்களுக்குள் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தனர்.

David Warner Slams Pakistan Cricketers Like Schoolboys Remark at PSL 2026 Captains Press Meet

இதனை கவனித்து ஆத்திரமடைந்த வார்னர், உடனடியாக தனது பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு, "என்ன பிரச்சனை ஜென்டில்மேன்? மன்னிக்கவும், இங்கே சில பள்ளிக்கூட சிறுவர்கள் இருக்கிறார்கள்" என்று அவர்களின் தொழில்முறையற்ற நடவடிக்கையை நேரடியாகவே மைக்கில் விமர்சித்தார். வார்னரின் இந்த அதிரடியான பேச்சைக் கேட்டு மேடையில் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்து அமைதியாகினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 பிஎஸ்எல் சீசனில் கராச்சி கிங்ஸ் அணியை டேவிட் வார்னர் வழிநடத்துகிறார். கடந்த 2025 ஆம் ஆண்டு பிஎஸ்எல் தொடரில் அறிமுகமான அவர் 11 போட்டிகளில் விளையாடி 368 ரன்களை குவித்தார். கடந்த சீசனில் இவரது தலைமையில் லீக் சுற்றில் 3வது இடத்தை பிடித்த அந்த அணி, எலிமினேட்டர் போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த ஆண்டு கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள வார்னர் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணியில் ஆடம் ஜம்பா, மொயீன் அலி, ஹசன் அலி, குஷ்தில் ஷா போன்ற பல நட்சத்திர வெளிநாட்டு மற்றும் உள்ளூர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, இந்த லீக்கின் முதல் ஏலத்தில் பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனான சல்மான் அலி ஆகாவை 5.85 கோடி ரூபாய்க்கு கராச்சி அணி ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு விளையாடிய 36 பிஎஸ்எல் போட்டிகளில் சல்மான் அலி 730 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

Story first published: Thursday, March 26, 2026, 14:05 [IST]
Other articles published on Mar 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+