Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அந்த உரிமை கூட இல்லையா; அவரும் மனிதர் தானே” விராட் கோலி மீதான விமர்சனம்.. ரசிகர்களை விளாசிய வார்னர்

சிட்னி: விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் விவகாரத்தில் ரசிகர்களுக்கு கடுமையான பதிலடியை டேவிட் வார்னர் கொடுத்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான விராட் கோலி, கடந்த 2 வருடங்களாக மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

டி20 மற்றும் ஒருநாள் கேப்டன்சி பதவியில் இருந்து அவர் விலகியதும் தனது பேட்டிங்கை மேம்படுத்துவதற்காக தான் எனக் கூறப்பட்டது.

கோலி மீது விமர்சனங்கள்

கோலி மீது விமர்சனங்கள்

கேப்டன்சி அழுத்தங்களால் விராட் கோலி கடந்த 777 நாட்களாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதாவது சுமார் 2 ஆண்டுகளாக சதமடிக்கவில்லை. கோலிக்கு மிகவும் பிடித்தமான சேஸிங்கில் கூட அவரால் தற்போது சிறப்பாக செயல்படமுடியவில்லை. தவறான ஷாட்களால் வெளியேறுகிறார். இதற்காக அவருக்கு சச்சின், சுனில் கவாஸ்கர் என பல்வேறு முன்னாள் வீரர்களும் அறிவுரை கூறி வருகின்றனர்.

டேவிட் வார்னர் அதிருப்தி

டேவிட் வார்னர் அதிருப்தி

இந்நிலையில் கோலி மீதான விமர்சனங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் குரல் கொடுத்துள்ளார். அதில், விராட் கோலியின் ஃபார்ம் குறித்து நிறைய பேர் பேசி வருகின்றனர். ஆனால் நாம் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். கொரோனா ஊரடங்கை தாண்டி வந்துள்ளோம். கோலி சமீபத்தில் தான் தந்தையானார். அவர் சிறப்பாக விளையாடியதை மட்டும் பார்க்கும் ரசிகர்கள் அவரை ஏன் சொதப்பும் போது ஏற்றுக்கொள்ளவில்லை.

அவருக்கு உரிமை இல்லையா

அவருக்கு உரிமை இல்லையா

நிறைய சிறப்பான விஷயங்களை செய்தவருக்கு.. சில நாட்கள் மோசமாக விளையாடக்கூட உரிமை இல்லையா?? கோலிக்கு உரிமை உள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 4 இன்னிங்ஸிற்கு ஒரு முறை சதமடிப்பார் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. இதனால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த அழுத்தத்திலேயே அவர் சதத்தை விட்டுவிட்டார்.

Recommended Video

IND vs SA India தோல்விக்கு இதுவே காரணம் –KL Rahul வருத்தம் | Oneindia Tamil
அழுத்தங்கள்

அழுத்தங்கள்

கோலியும் ஒரு மனிதர் தான்.. அவருக்கும் கடினமான சூழல்கள் வரக்கூடாதா., அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் தான் அதிகப்படியான அழுத்தங்கள் ஏற்படுகிறது. எனவே ஒவ்வொருவரும் புரிந்துக்கொண்டு நடக்க வேண்டும் என வார்னர் கூறியுள்ளார். டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி மிக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, January 8, 2022, 17:17 [IST]
Other articles published on Jan 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+