Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோட்டு சூட்டை மாட்டிகிட்டு.. அசர வைத்த டிக்டாக் மன்னன்.. சில மணி நேரத்தில் 1.6 கோடி வியூஸ்!

சிட்னி : இந்த வார்னர் சும்மாவே இருக்க மாட்டாரா? என்ன டான்ஸ் இது.. இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு.. இப்படித் தான் இந்திய ரசிகர்கள் வார்னரை ரசித்து வருகிறார்கள்.

Recommended Video

David Warner dancing on 'bala bala' from Houseful 4

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி துவக்க வீரர் டேவிட் வார்னர் டிக்டாக்கில் இந்திய பாடல்கள், வசனங்களை வைத்து வீடியோ போட்டு வருகிறார்.

டிக்டாக் மன்னன் என கூறும் அளவுக்கு அவரது வீடியோக்கள் செமயாக வைரல் ஆகி வருகிறது.

பால் டேம்பரிங் சர்ச்சை

பால் டேம்பரிங் சர்ச்சை

டேவிட் வார்னர் 2018இல் பால் டேம்பரிங் சர்ச்சையில் சிக்கியவர். பந்தை சேதப்படுத்த திட்டம் தீட்டி, சக வீரரை பந்தை சேதப்படுத்த வைத்தார் என ஓராண்டு தடை செய்யப்பட்டார். அந்த தடையில் இருந்து மீண்டு வந்த அவர் கிரிக்கெட் அரங்கில் பட்டையைக் கிளப்பி வந்தார்.

ஐபிஎல் தொடர் தள்ளி வைப்பு

ஐபிஎல் தொடர் தள்ளி வைப்பு

தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வந்த அவர் மார்ச் இறுதியில் துவங்க இருந்த ஐபிஎல் தொடரில் ஆட ஆவலாக இருந்தார். எனினும், கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தள்ளி வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் தன் வீட்டிலேயே லாக்டவுனில் இருந்தார் டேவிட் வார்னர்.

ஆசைக்காக டிக்டாக்

ஆசைக்காக டிக்டாக்

பொழுது போகாமல் தன் மகளின் ஆசைக்காக டிக்டாக் வீடியோக்கள் போடத் துவங்கிய அவர் அதற்கு அடிமையே ஆகி விட்டார் என்று சொல்லும் அளவுக்கு தினமும் டிக்டாக் வீடியோ போட்டு வருகிறார். ஆனால், ஏனோதானோ வீடியோ எல்லாம் போடுவதில்லை.

கடும் உழைப்பு

கடும் உழைப்பு

செமயாக கான்செப்ட் பிடித்து குடும்பத்துடன் கடும் உழைப்பை கொடுத்து வீடியோக்கள் போட்டு வருகிறார். இதில் இந்திய சினிமாக்களின் பாடல்களுக்கு அவர் போடும் ஆட்டம் தான் அருமை. அந்த டிக்டாக் வீடியோக்கள் தான் வைரல் ஆகி வருகின்றன.

புட்ட பொம்மா பாடல்

புட்ட பொம்மா பாடல்

முதலில் புட்ட பொம்மா என்ற சூப்பர் ஹிட் தெலுங்கு பாடலுக்கு ஆடினார். அது 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று டிக்டாக்கில் புயலைக் கிளப்பியது. அடுத்து இஞ்சி இடுப்பழகா பாடலின் பின்னணி இசைக்கு நடனம் ஆடினார்.

டிக்டாக் வெறி

டிக்டாக் வெறி

பாகுபலி வசனம் பேசிய அவர் அடுத்து தன் குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன், தன் வயதான தாயையும் சேர்த்து டிக்டாக் செய்ய வைத்தார். அவரது டிக்டாக் வெறி எல்லையே இல்லாமல் சென்று வந்த நிலையில், பாலிவுட் பாடல் ஒன்றை குறி வைத்தார்.

என்ன பாடல்?

என்ன பாடல்?

ஹவுஸ்புல் 4 திரைப்படத்தில் பாலா என்ற ஒரு பாடல் உள்ளது. அக்ஷய் குமார் ஆடும் அந்த பாடலை கோட் சூட் போட்டு ஆடி உள்ளார் டேவிட் வார்னர். அவரது அசைவுகள் வேடிக்கையாக இருப்பதால் ரசிகர்கள் இதை அதிகம் விரும்பி வருகிறார்கள்.

1.64 கோடி பார்வைகள்

19 மணி நேரத்திற்குள் 1.64 கோடி பார்வைகளை டிக்டாக் செயலியில் பெற்றுள்ளது. இதே வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அதை சுமார் 11 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். கிரிக்கெட் இல்லாவிட்டாலும் சமூக வலைதளத்தை ஒரு கை பார்த்து வருகிறார் டிக்டாக் மன்னன் வார்னர்.

கோலி வாங்க

கோலி வாங்க

வார்னரின் இந்த வீடியோவை பார்த்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிரிக்கும் ஈமோஜிக்களை பதிவிட்டு கமென்ட் செய்து இருந்தார். அதைக் கண்ட வார்னர், விராட் கோலியையும் டிக்டாக் செய்ய அழைத்துள்ளார். அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் டூயட் ஆடுமாறு தூண்டி விட்டுள்ளார்.

Story first published: Saturday, May 23, 2020, 13:08 [IST]
Other articles published on May 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+