For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3வது போட்டியில டேவிட் வார்னர் கண்டிப்பா விளையாடுவாரு... ஜஸ்டின் லாங்கர் நம்பிக்கை

சிட்னி : இந்தியாவிற்கு எதிரான கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.

3வது போட்டியில் அவர் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்னும் முழுமையாக குணமடையாத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் அவர் நாளை மறுதினம் துவங்கவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடுவார் என்று அந்த அணியின் தலைமை கோச் ஜஸ்டின் லாங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதையொட்டி இரு அணிகளும் சிட்னியில் இன்று தங்களது பயிற்சிகளை துவங்கியுள்ளன. இரு அணிகளுக்கு இடையில் இரு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தலா ஒரு வெற்றியை பெற்று இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

3வது போட்டியில் பங்கேற்பு

3வது போட்டியில் பங்கேற்பு

கடந்த இரு போட்டிகளில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் விளையாடவில்லை. இந்நிலையில் அவர் தற்போது 3வது போட்டியில் பங்கேற்று விளையாடுவார் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவருக்கு காயம் முழுமையாக குணமாகவில்லை என்றாலும் அவர் சமாளித்து விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

லாங்கர் நம்பிக்கை

லாங்கர் நம்பிக்கை

இதே நம்பிக்கையை தற்போது அணியின் தலைமை கோச் ஜஸ்டின் லாங்கரும் தெரிவித்துள்ளார். கடந்த 12 மாதங்களாக டெஸ்ட் போட்டிகளில் வார்னர் விளையாடாததை சுட்டிக் காட்டியுள்ள லாங்கர், ஆயினும் அவர் தற்போது 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடுவார் என்று கூறியுள்ளார்.

புகோவ்ஸ்கி பங்கேற்பு

புகோவ்ஸ்கி பங்கேற்பு

வார்னர் போராட்ட குணம் கொண்டவர் என்றும் அதை கொண்டு அவர் 3வது போட்டியில் பங்கேற்று விளையாடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளதாகவும் லாங்கர் தெரிவித்துள்ளார். இவரும் காயம் காரணமாக கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

Story first published: Tuesday, January 5, 2021, 12:11 [IST]
Other articles published on Jan 5, 2021
English summary
Will Pucovski set for debut in Sydney -says Justin Langer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+