Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிட்னியில் டேவிட் வார்னர்.. ஆஸ்திரேலிய வீரர்கள் அறைக்கு வருமாறு அழைப்பு.. என்ன நடக்குது? #IndvsAus

சிட்னி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர் தற்போது சர்வதேச கிரிக்கெட் தடை காலத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில், இன்று இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டி20 தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெறும் சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் இருவரும் பந்து சேத விவகாரத்தில் சர்வதேச போட்டிகளில் ஆட ஓராண்டு தடை பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் அணியில் டேவிட் வார்னர்

உள்ளூர் அணியில் டேவிட் வார்னர்

டேவிட் வார்னர் இதே சிட்னி மைதானத்தில் காலை நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார். சிட்னியின் கிரிக்கெட் அணியான ராண்ட்விக் பீட்டர்ஷாம் என்ற உள்ளூர் அணிக்காக ஆடி வருகிறார் டேவிட் வார்னர்.

டேவிட் வார்னர் 81

டேவிட் வார்னர் 81

அந்த உள்ளூர் அணி பங்கேற்ற டி20 போட்டி சிட்னி மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி துவங்கும் முன்பு காலை வேளையில் நடைபெற்றது. அந்த போட்டியில் ஆடிய டேவிட் வார்னர் சிறப்பான பங்களிப்பை அளித்தார். 49 பந்துகளில் 81 ரன்கள் அடித்த அவர் அணியை வெற்றி பெறச் செய்தார். 14.4 ஓவர்களில் 148 ரன்கள் இலக்கை எட்டியது வார்னர் அணி.

வலைபயிற்சியில் வார்னர்

வலைபயிற்சியில் வார்னர்

இந்த போட்டிக்கு பின்னர் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள ஹேசல்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் பந்துவீச சிறிது நேரம் வலை பயிற்சியில் ஈடுபட்டார். ஒரு வருட தடை காலத்தில் இருக்கும் வார்னர் மற்ற ஆஸ்திரேலிய அணி வீரர்களோடு பயிற்சி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறைக்கு வருமாறு அழைப்பு

அறைக்கு வருமாறு அழைப்பு

அதன் பின் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் வார்னரை ஆஸ்திரேலிய வீரர்கள் அறைக்கு வருமாறு அழைத்துள்ளார். போட்டி முடிந்தவுடன் வார்னர் ஆஸ்திரேலிய வீரர்களுடன் உரையாடுவார் என தெரிகிறது.

தடை நீக்கம் கிடையாது

தடை நீக்கம் கிடையாது

முன்னதாக, டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தடையை இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன் நீக்க சில முயற்சிகள் நடந்தன. எனினும், கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடையை நீக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து, அவர்கள் இருவரும் வரும் மார்ச் மாதம் வரை தடையில் தான் இருப்பார்கள்.

Story first published: Sunday, November 25, 2018, 14:59 [IST]
Other articles published on Nov 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+