Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி டின்னருக்கு அழைப்பார் - டேவிட் வார்னர் வெயிட்டிங்

Recommended Video

கோலி டின்னருக்கு அழைப்பார்... காத்திருக்கும் வார்னர் | Warner waits for Dinner Invite from kohli

ராஜ்காட் : இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி ராஜ்காட்டில் நாளை நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் வெற்றியை தவறவிட்ட இந்தியா 2வது போட்டியில் வெற்றிபெற தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் தன்னை விராட் கோலி இரவு விருந்துக்கு அழைப்பார் என்று காத்திருப்பதாக ஐபிஎல் டீம் சன் ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு அளித்த பேட்டியில் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்து இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்த டேவிட் வார்னர், விராட் கோலியின் அழைப்பிற்காக தான் செல்பேசியுடன் காத்திருப்பதாக தெரிவித்தார்.

முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா

முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற நிலையில், அதில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது.

ராஜ்காட்டில் நாளை நடைபெறுகிறது

ராஜ்காட்டில் நாளை நடைபெறுகிறது

இந்த தொடரின் இரண்டாவது போட்டி ராஜ்காட்டில் நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற இந்தியா தீவிர முனைப்புடன் உள்ளது.

சிறப்பான போட்டி -வார்னர்

சிறப்பான போட்டி -வார்னர்

இதனிடையே ஐபிஎல் அணியான சன் ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இந்தியாவுடன் விளையாடுவது சிறப்பான போட்டியாக இருக்கும் என்று டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

போன் பக்கத்திலேயே காத்திருப்பு

மேலும் விராட் கோலி தன்னை டின்னருக்கு அழைப்பார் என்று தான் போனுடன் காத்திருப்பதாகவும் டேவிட் வார்னர் கூறியுள்ளார். இந்த கோரிக்கைக்கு விராட் கோலி என்ன பதில் சொல்வார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Story first published: Thursday, January 16, 2020, 18:48 [IST]
Other articles published on Jan 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+