Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அத்தனை போராட்டமும் வீண்.. களத்திலேயே உடைந்த 37 வயது நமீபியா வீரர்.. டி20 உலகக்கோப்பையில் சோக சம்பவம்

ஆஸ்திரேலியா: டி20 உலகக்கோப்பையில் வெற்றியின் விளிம்பு வரை சென்று தோற்றதால் அமீரக வீரர் ஒருவர் களத்திலேயே விழுந்து வருந்தியது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

டி20 உலகக்கோப்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த முதல் சுற்று போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இன்று நடைபெற்ற போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இறுதிகட்ட போட்டி

இறுதிகட்ட போட்டி

தனது முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்திய நமீபியா அணி 2வது போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தோற்றது. எனவே இந்த போட்டியில் வென்றால் மட்டுமே சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது. மறுபுறம் ஏற்கனவே 2 போட்டிகளில் தோற்ற அமீரகம் ஒரு வெற்றியாவது பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்கியது.

எளிய இலக்கு

எளிய இலக்கு

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் ஆடிய அமீரக அணி 20 ஓவர்களில் 148/3 ரன்களை குவித்தது. இதனை தொடர்ந்து ஆடிய நமீபியா அணியில் தொடக்கமே அதிர்ச்சி தான். டாப் ஆர்டர் வீரர்களான வேன் லிங்கன் 10, பார்ட் 4, லோப்டி-ஈதன் 1, எரஸ்மஸ் 16, ஜான் பிரைலிங்க் 14, ஜேஜே ஸ்மித் 3 என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் அந்த அணி 69 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

தனியாளாக போராட்டம்

தனியாளாக போராட்டம்

லோயர் ஆர்டரில் களமிறங்கிய 37 வயது வீரர் டேவிட் வீஸ் தனி ஒருவராக அணியை தூக்கி நிறுத்தினார். 7வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்த வீஸ் மற்றும் ரூபென் ட்ரம்பெல்மேன் ஆகியோர் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் நமீபியா அணி கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. எப்படியும் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்று எதிர்பார்த்த போது, 3வது பந்திலேயே டேவிட் வீஸ் 55 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் நம்பீயா அணி 141 ரன்களை மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததது.

ரசிகர்கள் வருத்தம்

ரசிகர்கள் வருத்தம்

இந்த போட்டியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் நமீபியா சூப்பர் 12 சுற்றுக்கு சென்றிருக்கும். வெற்றியின் விளிம்பு வரை அழைத்துச் சென்ற வீஸ், தன்னால் வெற்றியை தேடி தர முடியவில்லை என்ற வருத்தத்தில் களத்திலேயே உட்கார்ந்து மிகவும் வருத்தப்பட்டார். 37 வயதாகும் வீஸுக்கு இதுதான் கடைசி டி20 உலகக்கோப்பையாக இருக்கலாம். அப்படி இருக்கையில் இதுபோன்ற தோல்வி வந்திருக்க கூடாது என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Story first published: Thursday, October 20, 2022, 21:19 [IST]
Other articles published on Oct 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+