Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க இப்படி அடிக்குறாரு? மிக அதிக பேட்டிங் ஆவரேஜ்.. அதிவேக ஆறாவது சதம்.. டாவிட் மலன் அதிரடி

தரம்சாலா : இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் டாவிட் மலன் இந்த உலகக்கோப்பை தொடரின் ஆபத்தான வீரர் என்பதை நிரூபித்து இருக்கிறார்.

வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் சதம் அடித்தார். இது அவரது ஆறாவது ஒருநாள் போட்டியாகும்.

ஒருநாள் போட்டிகளில் அவரது ஃபார்ம் மிக அபாரமாக உள்ளது. அதை தொடர்ந்து அவரது பேட்டிங் சராசரி மிரள வைக்கும் வகையில் உள்ளது.

Dawid Malan proves he is the dangerous player in ICC ODI world cup 2023

வங்கதேசத்திற்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் டாவிட் மலன் - ஜானி பேர்ஸ்டோ துவக்கம் அளித்தனர். பேர்ஸ்டோ 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜோ ரூட்-உடன் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடிய மலன் சதம் கடந்தார்.

107 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து மலன் ஆட்டமிழந்தார். இந்த உலகக்கோப்பை தொடரில் அவர் ஆடும் இரண்டாவது போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இந்தப் போட்டியில் 16 ஃபோர் மற்றும் 5 சிக்ஸ் அடித்து இருக்கிறார்.

கடந்த 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன் குவித்த வீரர் டாவிட் மலன் தான். மேலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் மிகக் குறைந்த இன்னிங்ஸில் ஆறு சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் செய்துள்ளார்.

23 ஒருநாள் போட்டி இன்னிங்க்ஸ்களில் மலன் ஆறு சதம் அடித்துள்ளார். அதே போல, ஒரே ஆண்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் கோவர், ஜானி பேர்ஸ்டோ, ஆகியோருடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். மூவருமே ஒரே ஆண்டில் 4 சதம் அடித்துள்ளனர்.

இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் மற்றும் பிற ஒருநாள் தொடர்களிலும் மலன் ஆட இருப்பதால் அவர் இன்னும் அதிக சதங்களை அடிக்க முடியும். இது எல்லாவற்றையும் விட அவரது பேட்டிங் சராசரி தான் அச்சமூட்டும் வகையில் உள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி முதல் 9 இன்னிங்க்ஸ்களில் 674 ரன்கள் குவித்துள்ளார். இதன் சராசரி 84.25 ஆகும். இதன் ஸ்ட்ரைக் ரேட் 100 ஆகும். இதன் மூலம் உச்சகட்ட பார்மில் இருக்கும் மலன் இந்த உலகக்கோப்பையின் ஆபத்தான வீரராக அறியப்படுகிறார். இவரது விக்கெட்டை வீழ்த்துவதே மற்ற அணிகளின் முக்கிய குறிக்கோளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Tuesday, October 10, 2023, 17:15 [IST]
Other articles published on Oct 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+