முதல்ல பீர்.. அப்புறம் தான் பந்து.. தாத்தாவின் அலப்பறை.. வைரல் வீடியோ!
சிட்னி : கிரிக்கெட் போட்டிகளில் பல வேடிக்கையான சம்பவங்கள் நடைபெறும்.
தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஸ் லீக் கிரிக்கெட் தொடரில் அப்படி ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது.
டேவிட் மலன் அடித்த சிக்ஸ் ஒன்று ஒரு முதியவரின் பீர் கோப்பையில் விழுந்தது. அந்த முதியவர் பந்தை உடனே கொடுக்கவில்லை.

பிக் பாஷ்
பிக் பாஷ் லீக் டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்கள் வர அனுமதி வழங்கப்படுகிறது. பிக் பாஷ் லீக் தொடருக்கும் அதிக அளவில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

டேவிட் மலன்
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் இடையே ஆன லீக் போட்டி நடைபெற்றது. அதில் ஹரிகேன்ஸ் அணி வீரர் டேவிட் மலன் அதிரடி ஆட்டம் ஆடினார். அரைசதம் கடந்த நிலையில் அவர் பெரிய சிக்ஸ் ஒன்றை அடித்தார்.

பீருக்குள்ளே பந்து
அந்த பந்தை ரசிகர் ஒருவர் பிடிக்க முயன்றார். ஆனால், பந்து அவர் கையில் இருந்து நழுவி அருகில் இருந்த முதியவர் ஒருவரின் பீர் கோப்பையில் விழுந்தது. அது பார்க்க வேடிக்கையாக இருந்தது. பீல்டர் பந்தை அவரிடம் இருந்து வாங்க முயன்றார்.
முதலில் பீர்
ஆனால், அந்த முதியவர் பந்தை தர மறுத்தார். கோப்பைக்குள்ளேயே பந்து இருந்த நிலையில், பீரை குடித்து முடித்தார். அதன் பின்னரே பந்தை பீல்டரிடம் அளித்தார். முதலில் பீர்.. அப்புறம் தான் பந்து என அவர் நடந்து கொண்ட விதம் சிரிப்பை வரவழைத்தது.

ஹரிகேன்ஸ் வெற்றி
இந்தப் போட்டியில் மலன் அதிரடியாக ஆடி 56 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். ஹரிகேன்ஸ் அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 143 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.


Click it and Unblock the Notifications