Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"சக்ஸஸ்.. பகல் இரவு டெஸ்ட் சக்ஸஸ்".. பராசக்தி சிவாஜி கணேசன் போல துள்ளிக் குதிக்கும் ஐசிசி!

அடிலைட்: முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி பெரும் வெற்றியையும், வரவேற்பையும் பெற்றிருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையிலான பகல் இரவு டெஸ்ட் போட்டி அடிலைட் நகரில் நடந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி 5 நாட்கள் வரை நீடிக்கவில்லை. மாறாக 3 நாட்களிலேயே முடிந்து விட்டது. ஆனாலும் ரசிகர்களின் வரவேற்பு பிரமாதமாக இருந்தது. 3 நாட்களிலும் போட்டியைப் பார்த்து ரசித்தவர்கள் ஒன்றே கால் லட்சம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

லோ ஸ்கோர் போட்டி

லோ ஸ்கோர் போட்டி

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றது. இருப்பினும் போட்டியை ஆஸ்திரேலியா வென்று விட்டது. வெற்றி பெறுவதற்கு 187 ரன்களே தேவைப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கைத் தொட்டது.

ஐசிசி மகிழ்ச்சி

ஐசிசி மகிழ்ச்சி

இப்போட்டி குறித்து ஐசிசியின் தலைமை எக்சிகியூட்டிவ் டேவிட் ரிச்சர்ட்சன் கூறுகையில், இந்தப் போட்டிக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி தருகிறது, பிரமிப்பாக இருக்கிறது. மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது திருப்தி தருகிறது.

அபார வெற்றி

அபார வெற்றி

அடிலைடில் நடந்த முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி பெரிய வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை. கிரிக்கெட் ரசிகர்கள் உலகம் முழுவதும் இதை ரசித்துப் பார்த்துள்ளனர்.

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

இந்தப் போட்டி சாத்தியமாகவும், வெற்றிகரமாக முடியவும் உதவி ஆஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கு எனது வாழ்த்துகள். மிகவும் திரில்லான முறையில் இது நடந்து முடிந்துள்ளது.

எல்லா இடத்திலும் சாத்தியமில்லை

எல்லா இடத்திலும் சாத்தியமில்லை

அதேசமயம், எல்லா மைதானத்திலும் இது சாத்தியமில்லை. அதற்கு காலம் பிடிக்கலாம். அதேசமயம், நி்ச்சயம் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும், டிவி ஒளிபரப்பாளர்களுக்கும் இது புது கோணத்தைக் கொடுத்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை என்றார் அவர்.

Story first published: Monday, November 30, 2015, 12:57 [IST]
Other articles published on Nov 30, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+