இது வேற லெவல்.. ரிஷப் பண்ட்க்காக டெல்லி அணி எடுத்த முயற்சி.. பாண்டிங் வெளியிட்ட தகவல்
டெல்லி: டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் ஜெர்சி நம்பரை டெல்லி அணி வீரர்களின் தொப்பி மற்றும் ஜெர்சியில் பதிக்க டெல்லி அணி நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தில் பெண்கள் அணி ஆடும் கால்பந்து போட்டியில் ஒரே பெயர் மற்றும் ஜெர்சி நம்பர் அணிந்து களமிறங்குவார்கள். அதுபோல் டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்வாகம் ரிஷப் பண்ட் விரைந்து குணமடைய முக்கிய சம்பவத்தை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், நூலிழையில் உயிர் தப்பினார். இந்த விபத்து காரணமாக படுத்த படுக்கையாக இருந்து சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட், தற்போது தீவிர ஓய்வில் இருக்கிறார்.

ரிஷப் பண்ட் காயம்
அண்மை நாட்களில் ரிஷப் பண்ட்-ஐ சந்தித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பேசி வருகின்றனர். அதில் காலில் ஏற்பட்ட காயத்தில் ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று வருவது உறுதியானது. இந்த காயம் குணமடைய இன்னும் சில மாதங்களாகும் வகையில், ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

டெல்லியின் இதயம்
டெல்லி அணியின் கேப்டனாக உள்ள ரிஷப் பண்ட் பங்கேற்காதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பதிலாக டெல்லி அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக அக்சர் படேல் செயல்பட உள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில், டெல்லி அணியின் இதயம் ரிஷப் பண்ட் தான்.

ரிஷப் பண்ட் ஜெர்சி நம்பர்
ஒவ்வொரு போட்டியின் போதும் ரிஷப் பண்ட் என் அருகில் அமர்ந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. இருப்பினும் அவரை அணியின் ஒரு அங்கமாக கொண்டு வர முயற்சித்து வருகிறோம். அவரின் ஜெர்சி நம்பரை அணியின் தொப்பி மற்றும் டீ-ஷர்ட்டில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் ரிஷப் பண்ட் எங்களுடன் இல்லையென்றாலும், அவரே எங்களின் கேப்டன் என்பதை சொல்லும் வகையில் இருக்கும் என்று தெரிவித்தார்.

விக்கெட் கீப்பர் யார்?
அதேபோல் டெல்லி அணியின் விக்கெட் கீப்பராக யார் செயல்பட போகிறார்கள் என்ற கேள்விக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. டெல்லி அணி மும்பை இளம் வீரர் சர்ஃபராஸ் கானை விக்கெட் கீப்பராக பயன்படுத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் டெல்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அதுகுறித்து எதையும் உறுதி செய்யவில்லை.


Click it and Unblock the Notifications