For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தவான் ஆட்டம் வீண்.. வாட்சன் அசத்தல்! ஜாதவ், தோனியால் தேவையற்ற பரபரப்பு.. கடைசி ஓவரில் சென்னை வெற்றி!

Recommended Video

IPL 2019: Chennai wins | 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி

டெல்லி : 2019 ஐபிஎல் தொடரின் ஐந்தாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் வெற்றியுடன் சேர்த்து இரண்டு போட்டிகளில் வென்றுள்ளது சென்னை அணி. கடந்த சீசனில் இருந்து தொடர்ந்து ஐந்தாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது சென்னை அணி.

ப்ரித்வி ஷா, தவான்

ப்ரித்வி ஷா, தவான்

டெல்லி அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்கு ப்ரித்வி ஷா, தவான் நல்ல துவக்கம் அளித்தனர். ப்ரித்வி ஷா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 18 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

தவான் அரைசதம்

தவான் அரைசதம்

தவான் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 13 பந்துகளில் 25 ரன்கள் கொடுத்து தன் வேலையே பாதியிலேயே முடித்துக் கொண்டு கிளம்பினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

சென்னை பந்துவீச்சு

சென்னை பந்துவீச்சு

டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் இழந்து இருந்தது. சென்னை அணியில் பிராவோ 3, தீபக் சாஹர், ஜடேஜா, இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

148 ரன்கள் இலக்கு

148 ரன்கள் இலக்கு

சென்னை அணி 148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடத் துவங்கியது. அம்பதி ராயுடு 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினார். ஷேன் வாட்சன் அதிரடி காட்டினார். அவர் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது சென்னை அணியின் ரன் ரேட் 10க்கும் மேல் இருந்தது.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

ரெய்னா 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து தன் பங்குக்கு ரன் சேர்த்தார். அடுத்து ஜாதவ், தோனி இணைந்து நிதான ஆட்டம் ஆட ரன் ரேட் சரிந்தது. எனினும், கடைசி 24 பந்துகளில் 23 ரன்கள் என்ற நிலையில் இருந்தது ஆட்டம்.

தேவையற்ற பரபரப்பு

தேவையற்ற பரபரப்பு

17வது ஓவரில் தோனி பேட்டிங் செய்து ஒரு ரன் மட்டுமே எடுக்க, போட்டியில் தேவையற்ற பரபரப்பு உண்டானது. எனினும், 18வது ஓவரில் தோனி மளமளவென ரன்கள் சேர்க்க 11 ரன்கள் கிடைத்தது. 19வது ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்தார்.

ஜாதவ் அவுட்

ஜாதவ் அவுட்

கடைசி ஓவரில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஜாதவ் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து பிராவோ களமிறங்கினார். அவர் இரண்டு பந்துகளில் ரன் குவிக்க முடியாமல் திணறினார்.

வெற்றி

வெற்றி

கடைசி 3 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒரு ஃபோர் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்து வைத்தார் பிராவோ. சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் மும்பை அணியை வென்ற டெல்லி அணி, இரண்டாவது போட்டியில் சென்னையிடம் தோல்வி அடைந்துள்ளது.

Story first published: Wednesday, March 27, 2019, 0:14 [IST]
Other articles published on Mar 27, 2019
English summary
DC vs CSK IPL 2019 : Chennai Super Kings beat Delhi Capitals
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+