Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னய்யா இப்படி பண்றீங்க? மேட்ச் டெல்லி-ல நடக்குதா? இல்லை சென்னை-ல நடக்குதா?

Recommended Video

IPL 2019: Chennai vs Delhi | இந்த ஆட்டம் டெல்லியில் நடக்குதா? சென்னையில் நடக்குதா?

டெல்லி : சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இடையே ஆன ஐபிஎல் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியைக் காண வந்திருந்த ரசிகர்கள் டெல்லி அணிக்கு ஆதரவு அளிப்பார்கள் என நினைத்தால், நினைத்ததற்கு மாறான காட்சியை தான் நாம் பார்க்க முடிந்தது.

சென்னைக்கு ஆதரவு

டெல்லியில் குழுமி இருந்த ரசிகர்கள், சென்னை அணி முதலில் பீல்டிங் செய்ய வந்ததில் இருந்தே "தோனி, தோனி" என முழக்கமிடத் துவங்கினர். அதே போல, சென்னை அணிக்கும் ஆதரவு தெரிவித்து குரல் எழுப்பினர். போட்டி சென்னையில் நடக்கிறதா என குழப்பம் ஏற்படும் அளவுக்கு ரசிகர்கள் சென்னைக்கு ஆதரவாக குழுமி இருந்தனர்.

வலுவான ரசிகர்கள்

ஐபிஎல் அணிகளிலேயே மிகவும் வலுவான ரசிகர்களை கொண்ட அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். கடந்த 2008 முதல் அந்த அணியின் கேப்டனாக தோனி தொடர்ந்து இருந்து வருகிறார்.

பிளே-ஆஃப் சென்ற அணி

சென்னை அணி தான் பங்கேற்ற ஒவ்வொரு ஆண்டிலும், ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சுரேஷ் ரெய்னா, பிராவோ போன்ற வீரர்கள் பல வருடங்களாக அதே அணியில் தொடர்ந்து ஆடி வருகின்றனர்.

மவுசு அதிகம்

மவுசு அதிகம்

இதனால் தான் சென்னை அணி 2 ஆண்டுகள் தடைக்குப் பின் வந்த போதும் ரசிகர்கள் எண்ணிக்கை குறையாமல் அப்படியே இருந்தனர். அது வளர்ந்து தற்போது, மற்றொரு அணியின் மைதானத்தில் கூட சென்னை அணிக்கு தான் மவுசு அதிகம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Story first published: Tuesday, March 26, 2019, 23:10 [IST]
Other articles published on Mar 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+