தோனி ரசிகர்களே! இதெல்லாம் நல்லதுக்கு இல்லை.. சொன்னாக் கேளுங்க.. அடம்பிடிக்கக் கூடாது!!
டெல்லி : சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இடையே ஆன 5வது ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் போது தோனியின் காலை தொட்டு ஆசிர்வாதம் (?!) வாங்க இரண்டு ரசிகர்கள் பாதுகாப்பு வீரர்களை தாண்டி உள்ளே நுழைந்தனர்.

ரசிகர்கள் அத்துமீறல்
தோனியை பார்க்க சர்வதேச போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் இதுவரை பல முறை இப்படி ரசிகர்கள் எல்லை மீறி, அத்து மீறி, மைதானத்துக்குள் நுழைந்து வருகின்றனர். இது கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது.

கவலை
ஆனால், தோனி ரசிகர்கள் சிலர் இதை முக்கியச் செய்தி போல கொண்டாடி வருவது பொதுவான கிரிக்கெட் ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. முதலில் இது போன்ற செயல்கள் தோனியின் தனி மனித சுதந்திரத்தை மீறுவதாகும்.

பாதுகாப்பு குறைபாடு
அதுவும் முக்கிய போட்டியின் இடையே இப்படி நடைபெறுவதை சில சமயம் தோனி அனுமதித்தாலும், பல சமயம் அவரது மனநிலைக்கு அது இடையூறாகவே அமையும். ஆனால், அதை விட முக்கியமானது தோனி உள்ளிட்ட அத்தனை கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பும் இது போன்ற சம்பவங்களால் பாதிக்கப்படுகிறது.

சாதனை அல்ல
சில ரசிகர்கள் இதை ஏதோ சாதனை என்பதைப் போல செய்து வருகின்றனர். தொலைக்காட்சியில் சிலர் ஏற்கனவே இப்படி செய்ததை பார்த்துவிட்டு தாங்களும், தோனியை அருகில் சென்று பார்க்க வேண்டும் என எல்லை மீறி வருகின்றனர்.

அடம் பிடிக்காமல் இருங்கள்!
ஆனால், இது போல எல்லை மீறும் ரசிகர்கள் காவல்துறை விசாரணை, நீதிமன்ற வழக்குகள் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டிய சிக்கல் எழலாம் என்பதை பற்றி தெரிந்து கொண்டு தான் இப்படி செய்கிறார்களா? என தெரியவில்லை. தோனி ரசிகர்களே, இனியாவது அத்துமீறுவேன் என அடம் பிடிக்காமல் உங்கள் எல்லைக்குள் இருந்தே உங்கள் நாயகன் தோனியை ரசியுங்கள்!


Click it and Unblock the Notifications