Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாவம்யா ஜாதவ்.. பிறந்தநாள் பார்ட்டி கொண்டாட சொன்னா இப்படி செஞ்சு வைச்சுருக்கீங்க!

டெல்லி : 2019 ஐபிஎல் தொடரில் தன் முதல் இரண்டு போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது. இந்த வெற்றியோடு சேர்த்து, ஜாதவ்வின் பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் சேர்த்து வைத்து அதிர வைத்துள்ளனர் சிஎஸ்கே வீரர்கள்.

கேக் அபிஷேகம்

பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் சாதரணமாக இல்லை. நம்ம ஊர் கல்லூரி மாணவர்கள் போல, ஜாதவ்வின் மேல் சட்டையை எல்லாம் கழட்டி விட்டு, அவர் மேல் கேக் அபிஷேகம் செய்து ஜாதவ்வை முதல்வன் அர்ஜுனாக மாற்றி, அதகளம் செய்தனர் சென்னை வீரர்கள்.

கேக்கை அள்ளிப் பூசி…

கேக் வெட்டி முதலில் தோனி, ரெய்னாவுக்கு ஊட்டும் வரை காத்திருந்தவர்கள், அதன் பின் கேக்கை அள்ளிப் பூசி ஆனந்தத்தில் திளைத்தனர். பிராவோ, சாம் பில்லிங்க்ஸ் போன்ற வெளிநாட்டு வீரர்களும் இந்த உற்சாகக் களிப்பில் ஆழ்ந்தனர்.

குறி வைத்த ஜாதவ்

உடம்பு முழுக்க கேக்கால் நனைந்த ஜாதவ் ஒரு கேக் துண்டை எடுத்து தன் மேல் கேக்கை அபிஷேகம் செய்த யாராவது ஒருவரை மேல் அடிக்கலாம் என குறி வைத்தார். எனினும், நல்ல பிள்ளையாக அதை கீழே போட்டுவிட்டு நகர்ந்தார்.

ஹைலைட்

ஹைலைட்

இவ்வளவு கலவரம் நடந்து கொண்டு இருந்த போது, இம்ரான் தாஹிர் ஒரு ஓரமாக நின்று கொண்டு நம் மேல் கேக்கை அடித்து விடுவார்கள் என பம்மிக் கொண்டு இருந்தது தான் கடைசியில் ஹைலைட்டாக இருந்தது.

Story first published: Wednesday, March 27, 2019, 20:55 [IST]
Other articles published on Mar 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+