தோனி பேட்டிங்.. உற்சாகக் குரல் எழுப்பிய மகள் ஸிவா.. இணையத்தை மயக்கிய வைரல் வீடியோ!!
Recommended Video

டெல்லி : தோனியின் செல்ல மகள் ஸிவாவின் வீடியோக்கள் ஏற்கனவே இணையத்தை தெறிக்க விட்டுள்ளன. ஆனால், நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் போட்டியில் ஸிவா தோனி ஒரு கலக்கு கலக்கினார்.
தன் தந்தையை உற்சாகப்படுத்த குரல் கொடுத்த ஸிவா எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டார்.

போட்டியில் தோனி
டெல்லி கேபிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் முதலில் ஆடிய டெல்லி அணி 147 ரன்கள் எடுத்தது. அடுத்து சென்னை அணி ஆடிய போது 11 வது ஓவரில் 3வது விக்கெட்டாக ரெய்னாவை இழந்தது. அப்போது தோனி பேட்டிங் ஆட வந்தார்.

ரசிகர்கள் வரவேற்பு
தோனி பேட்டிங் ஆட களத்துக்குள் வந்த போது டெல்லி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பெரும் உற்சாகக் குரல் எழுப்பினர். அந்த உற்சாகக் குரல்களை எல்லாம் ஓரங்கட்டியது ஸிவாவின் உற்சாகக் குரல்.
உற்சாகக் குரல்
ஸிவாவை அவரது தாய் தூக்கிப் பிடித்துக் கொள்ள "பப்பா... கம் ஆன் பப்பா" என தன் பிஞ்சுக் குரலால் தோனிக்கு உற்சாகக் குரல் எழுப்பினார். இணையத்தை இந்த வீடியோ மயக்கி வருகிறது.
சென்னை வெற்றி
தோனி இந்தப் போட்டியில் 32 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வாட்சன் 44, ரெய்னா 30, ஜாதவ் 27 ரன்கள் எடுக்க சென்னை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications