Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

DC vs GT: டெல்லி அணிக்கு எதிராக குஜராத் பேட்டிங்.. டாஸ் வென்ற அக்சர் படேல் பந்துவீச்சு தேர்வு

டெல்லி: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14வது லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

டாஸ் வென்ற பின் பேசிய டெல்லி கேப்டன் அக்சர் படேல், கடந்த 2 போட்டிகளில் நாங்கள் இலக்கை சிறப்பாக துரத்தி வெற்றி பெற்றுள்ளோம். இது முற்றிலும் புதிய ஆடுகளம். லேசான மழை பெய்துள்ளதால் ஆடுகளத்தில் ஈரப்பதம் இருக்க வாய்ப்புள்ளது. எனவே முதலில் பந்துவீசி குஜராத் அணியை குறைந்த ரன்களுக்குள் சுருட்டி, பின்னர் இலக்கை துரத்துவோம். இந்தப் போட்டிக்கான எங்கள் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

DC vs GT IPL 2026 Delhi Capitals Opt to Bowl Against Gujarat Titans as Axar Patel Wins Toss in Delhi

குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், எனது கழுத்து வலி இப்போது முற்றிலும் குணமாகிவிட்டது. டாஸ் வென்றிருந்தாலும் நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவே திட்டமிட்டிருந்தோம். இந்த சீதோஷ்ண நிலை அப்படியே தொடர்ந்தால் இரண்டாவது இன்னிங்சில் பனிப்பொழிவு இருக்காது. எனவே முதலில் பேட்டிங் செய்து சிறப்பான இலக்கை நிர்ணயிக்க முயற்சிப்போம். கடந்த போட்டியில் மிக சிறிய வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்தோம். பேட்டிங்கில் உள்ள குறைகளை சரி செய்து வெற்றி பெறுவோம். அணியில் குமார் குஷாக்ராவுக்கு பதிலாக நான் ஆடும் லெவனில் மீண்டும் வந்துள்ளேன் என தெரிவித்தார்.

டெல்லி மைதானத்தின் பவுண்டரி எல்லைகள் சிறியதாக இருப்பதால் பேட்டர்கள் எளிதாக சிக்சர்களை பறக்கவிட முடியும். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தாலும், ஆங்காங்கே லேசான வறட்சியுடன் காணப்படுவதால் அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரஷித் கான் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு இந்த ஆட்டத்தில் முக்கியமாக இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த சீசனில் இங்கு முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 198 ரன்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணி: கே.எல் ராகுல், பதும் நிசங்கா, நிதிஷ் ராணா, டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ், லுங்கி இங்கிடி, நடராஜன், முகேஷ் குமார்.

டெல்லி இம்பாக்ட் வீரர்கள்: அசுதோஷ் ஷர்மா, அவுகிப் நபி தார், சமீர் ரிஸ்வி, துஷ்மந்த சமீரா, கருண் நாயர்.

குஜராத் அணி: சுப்மன் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், ஷாருக்கான், ராகுல் திவேதியா, ரஷித் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், அசோக் சர்மா.

குஜராத் இம்பாக்ட் வீரர்கள்: பிரசித் கிருஷ்ணா, ஜேசன் ஹோல்டர், மானவ் சுதர், ஜெயந்த் யாதவ், அனுஜ் ராவத்.

Story first published: Wednesday, April 8, 2026, 19:13 [IST]
Other articles published on Apr 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+