Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

DC vs GT: பட்லர், வாஷிங்டன், சுப்மன் கில்.. டெல்லி டீமை பொளந்த குஜராத் டைட்டன்ஸ்.. 210 ரன் குவிப்பு

டெல்லி: 2026 ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. சுப்மன் கில், ஜோஸ் பட்லர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அரைசதம் விளாசி அசத்தினர். டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

துவக்க வீரரான சாய் சுதர்சன் 12 ரன்களில் முகேஷ் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின் கேப்டன் சுப்மன் கில் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். டெல்லி அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய பட்லர் 27 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 52 ரன்கள் விளாசி குல்தீப் யாதவ் சுழலில் வீழ்ந்தார். முதல் 6 ஓவர் பவர்பிளேயில் குஜராத் அணி 68 ரன்களை குவித்து சிறப்பான தொடக்கத்தை அமைத்தது.

DC vs GT Shubman Gill Jos Buttler and Washington Sundar Power Gujarat Titans to Massive 210

அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர், கேப்டன் கில் உடன் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தியது. மிகவும் பொறுப்பாக ஆடிய கில் 45 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 70 ரன்கள் எடுத்து லுங்கி இங்கிடி பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.

மறுபுறம் அதிரடி காட்டிய வாஷிங்டன் சுந்தர் 32 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 55 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆட்டத்தின் முடிவில் கிளென் பிலிப்ஸ் 14 ரன்களுடனும், ராகுல் திவேதியா 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை பதிவு செய்தது. டெல்லி தரப்பில் முகேஷ் குமார் 4 ஓவரில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லுங்கி இங்கிடி மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் எடுத்தனர். விப்ராஜ் நிகம் வீசிய 1 ஓவரில் 23 ரன்கள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, April 8, 2026, 21:37 [IST]
Other articles published on Apr 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+