Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தூள் கிளப்பிய தினேஷ் கார்த்திக்.. பாவம் பார்க்காத ரஸ்ஸல்.. டெல்லியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கூட்டணி!

டெல்லி : 2019 ஐபிஎல் தொடரின் சிறந்த அதிரடி அணி இது தான் என கொல்கத்தா அணி முதல் இரண்டு போட்டிகளில் பெற்ற பெயரை மூன்றாவது போட்டியிலும் தக்க வைத்தது.

ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 5 விக்கெட்கள் இழந்து தவித்து வந்த நிலையில், கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் இணைந்து அணியை மீட்டனர்.

கொல்கத்தா தவிப்பு

கொல்கத்தா தவிப்பு

டெல்லி அணிக்கு எதிரான 10வது ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது கொல்கத்தா அணி. நிகில் நாயக் 7, கிறிஸ் லின் 20, உத்தப்பா 11, ராணா 1, ஷுப்மன் கில் 2 என வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற கொல்கத்தா அணி 9.1 ஓவரில் 61 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்து தவித்து வந்தது.

ரன் குவிப்பது கடினம்

ரன் குவிப்பது கடினம்

முதல் இரண்டு போட்டிகளில் கொல்கத்தா பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தியது போல, இந்த போட்டியில் ரன் குவிக்காது. எப்படியும் 130-140 ரன்களை எட்டுவதே கடினம் என்ற நிலை இருந்தது.

ஜோடி

ஜோடி

அப்போது ஜோடி சேர்ந்தனர் தினேஷ் கார்த்திக் - ஆண்ட்ரே ரஸ்ஸல். தாங்கள் சந்தித்ததில் ஐந்து ஓவர்களில் 10க்கும் குறைவாக ரன் எடுத்த இந்த ஜோடி, மற்ற ஓவர்களில் வெளுத்து வாங்கியது.

மரண அடி

மரண அடி

அதுவரை சிறப்பாக பந்து வீசி வந்த சந்தீப் லாமிச்சேன், ஹர்ஷால் பட்டேல், மோரிஸ் என மூவரின் ஓவர்களில் ஃபோர், சிக்ஸ் என அடித்து, கிழித்து தொங்கவிட்டது தினேஷ் கார்த்திக் - ஆண்ட்ரே ரஸ்ஸல் ஜோடி.

எத்தனை ரன்கள்?

எத்தனை ரன்கள்?

95 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி 156 ரன்கள் அடித்த பின் பிரிந்தது. 17.5 ஓவரில் ரஸ்ஸல் 62 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ரஸ்ஸல் 4 ஃபோர், 6 சிக்ஸர் அடித்திருந்தார்.

தினேஷ் கார்த்திக் அரைசதம்

தினேஷ் கார்த்திக் அரைசதம்

அதன் பின் தினேஷ் கார்த்திக் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். அவரும் சென்ற பின் பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ் கடைசி ஓவர்களில் ரன் குவிக்க 185 ரன்களை எட்டியது கொல்கத்தா.

Story first published: Saturday, March 30, 2019, 23:24 [IST]
Other articles published on Mar 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+