
போட்டி டை
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 185 ரன்கள் குவித்தது. அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி முதலில் சிறப்பாக பேட்டிங் செய்து வந்தது. எனினும், கடைசி சில ஓவர்களில் விக்கெட்களை, இழந்து தடுமாறி, 185 ரன்கள் மட்டுமே எடுத்து போட்டியை டை செய்தது.

சூப்பர் ஓவர்
பின்னர் சூப்பர் ஓவரில் போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி 10 ரன்கள் குவித்தது. அடுத்து கொல்கத்தா பேட்டிங் செய்த போது, டெல்லி அணியின் ரபாடா சூப்பர் ஓவரை வீசினார்.

திட்டம் என்ன?
ரபாடாவின் திட்டம் ஆறு பந்துகளையும் யார்க்கர்களாக வீசுவது என்பதே. முதல் பந்து மட்டும் திட்டமிட்டபடி ரபாடா வீசவில்லை. அந்த பந்தில் ஃபோர் அடித்தார், கொல்கத்தா அணியின் ரஸ்ஸல்.

அடுத்த 5 பந்துகள்
அடுத்த ஐந்து பந்துகளையும் சரியாக யார்க்கர்களாக வீசிய ரபாடா, கூடுதலாக 3 ரன்கள் மட்டுமே கொடுத்து ரஸ்ஸல் விக்கெட்டையும் கைப்பற்றினார். வெறும் 10 ரன்கள் மட்டுமே அடித்திருந்த டெல்லி அணி, கொல்கத்தா அணிக்கு 7 ரன்கள் மட்டுமே கொடுத்து சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

வெற்றிக்கு காரணம்?
இந்தப் போட்டியின் வெற்றிக்கு 99 ரன்கள் அடித்த டெல்லி அணியின் ப்ரித்வி ஷா ஒரு காரணம் என்றாலும், சூப்பர் ஓவர் வீசிய ரபாடா தான் முதன்மையான காரணம். அவர் தெளிவான திட்டம் போட்டு பந்து வீசி இருக்காவிட்டால் டெல்லி வெற்றி பெற்றிருக்காது.


Click it and Unblock the Notifications











