Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவுலிங், பீல்டிங், கேப்டன்சி.. ஆல்ரவுண்டராக மிரட்டிய சுனில் நரைன்.. ஒற்றை ஆளாக டெல்லிக்கு ஆப்பு!

டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் டெல்லி அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுனில் நரைனின் பவுலிங் மற்றும் கேப்டன்சி ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக கேகேஆர் அணி பக்கம் திருப்பியது.

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்களை குவித்தது. இதன்பின் டெல்லி அணி தரப்பில் டூ பிளசிஸ் - அபிஷேக் போரெல் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. கேகேஆர் அணி தரப்பில் அனுகுல் ராய் முதல் ஓவரை வீசினார்.

DC vs KKR KKR won by 14 runs against Delhi Capitals due to Sunil Narine performance at Delhi in the IPL 2025

அனுகுல் ராய் வீசிய 2வது பந்திலேயே அபிஷேக் போரெல் 4 ரன்களில் ஆட்டமிழக்க, உடனடியாக கருண் நாயர் களமிறக்கப்பட்டார். டூ பிளசிஸ் - கருண் நாயர் கூட்டணி அதிரடியாக ரன்கள் குவிக்க, டெல்லி அணியின் கைகள் ஓங்கியது. ஆனால் 5வது ஓவரில் கருண் நாயர் 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் வந்த கேஎல் ராகுல் 7 ரன்களில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

இதனால் டெல்லி அணி 60 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் டூ பிளசிஸ் - அக்சர் படேல் கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கியது. வருண் சக்கரவர்த்தி வீசிய 9வது ஓவரில் மட்டும் 4, 4, 6 என்று 16 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் 10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணியின் ஸ்கோர் 97 ரன்களாக உயர்ந்தது.

இதனிடையே சிறப்பாக ஆடிய டூ பிளசிஸ் 31 பந்துகளில் அரைசதம் கடக்க, அக்சர் படேல் சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசி தள்ளினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த அவர், சுனில் நரைன் பந்தில் 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின் வந்த ஸ்டப்ஸ் 1 ரன்னிலும், டூ பிளசிஸ் 62 ரன்களிலும், அஷுதோஷ் சர்மா 7 ரன்களிலும், மிட்சல் ஸ்டார்க் டக் அவுட்டாகியும் சீட்டுக் கட்டை போல் சரிந்தனர்.

இதனால் டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 38 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஹர்சித் ராணா வீசிய 19வது ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரில் 25 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. அந்த ஓவரை வீச ரஸ்ஸல் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் அதிரடியாக ஆடிய விப்ராஜ் நிகம் 19 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து வெளியேற, கேகேஆர் அணியின் வெற்றி உறுதியானது.

இறுதியாக டெல்லி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலமாக கேகேஆர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. கேகேஆர் அணி தரப்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, கேப்டனாகவும் அசத்தினார்.

Story first published: Tuesday, April 29, 2025, 23:28 [IST]
Other articles published on Apr 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+