Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேட்ச் பிக்ஸிங்? வாயைக் கொடுத்து வம்பில் சிக்கிய ரிஷப் பண்ட்.. கையும் களவுமாக பிடித்த ரசிகர்கள்!!

Recommended Video

IPL 2019: Rishabh pant: Delhi Vs Kolkata : வாயைக் கொடுத்து வம்பில் சிக்கிய ரிஷப் பண்ட்- வீடியோ

டெல்லி : ஐபிஎல் தொடர் என்றால் சர்ச்சை இல்லாமல் இருக்காது. ஆனால், இப்போது எழுந்துள்ள சர்ச்சை மேட்ச் பிக்ஸிங் தொடர்பானது.

டெல்லி - கொல்கத்தா அணிகள் ஆடிய 2019 ஐபிஎல் தொடரின் 10வது போட்டியில் ரிஷப் பண்ட் வழக்கம் போல விக்கெட் கீப்பிங் செய்யும் போது பேசிக் கொண்டே இருந்தார்.

சர்ச்சை பேச்சு

சர்ச்சை பேச்சு

அப்படி அவர் பேசிய ஒரு விஷயம் தான் இப்போது சர்ச்சையாக மாறி உள்ளது. ஐபிஎல் போட்டிகள் எல்லாமே பிக்ஸிங் செய்யப்பட்டவை என சிலர் கூறி வருவதை கருத்தில் எடுத்துக் கொள்ளும் வகையில் அமைந்தது அவர் பேசியது.

உத்தப்பா வந்தார்

உத்தப்பா வந்தார்

கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் ஆடி வந்தது. சந்தீப் லாமிச்சேன் பந்துவீச்சில் 3.4வது ஓவரில் நிகில் நாயக் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து உத்தப்பா களமிறங்கினார்.

இங்கே நாலு வரும்

இங்கே நாலு வரும்

அப்போது, விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த ரிஷப் பண்ட் ஹிந்தியில், "இங்கே தான் நாலு வரும்" என பொருள் கொள்ளும்படி கூறினார். இது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி, ஒளிபரப்பானது. அந்த பந்தில் உத்தப்பா ஃபோர் அடித்தார்.

இது பிக்ஸிங்

இதை கண்ட வட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலர், ஐபிஎல் போட்டிகள் மேட்ச் பிக்ஸிங் என்பதற்கு இந்த காட்சியே உதாரணம். ரிஷப் பண்ட் நாலு வரும் என்கிறார். உத்தப்பா ஃபோர் அடிக்கிறார். இது முழுக்க பிக்ஸிங் என இணையத்தில் கூறி வருகிறார்கள்.

அதிரடி இல்லை

இந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் அதிரடி காட்டிய பண்ட், இந்தப் போட்டியில் அதிக பவுண்டரி அடிக்காமல் ஒற்றை ரன்களாக ஓடிக் கொண்டு இருந்தார். அதுவும் கூட பிக்ஸிங் தான் என ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Story first published: Sunday, March 31, 2019, 19:12 [IST]
Other articles published on Mar 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+