Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பந்து எங்கேயோ ஈரோடு பக்கம், தூத்துக்குடி பக்கம் இருக்கு.. தப்புக் கணக்கால் அவுட்டான கொல்கத்தா வீரர்!

டெல்லி : 2019 ஐபிஎல் தொடரின் 10வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில் பந்தை சரியாக கவனிக்காமல் ரன் அவுட் ஆனார்.

ஷுப்மன் ரன் அவுட் ஆன விதம் பொறுப்பற்றதாக இருந்தது. கொல்கத்தா அணி இக்கட்டான சூழலில் இருந்த போது தன் விக்கெட்டை மோசமாக இழந்து வெறுப்பேற்றினார்.

கொல்கத்தா திணறல்

கொல்கத்தா திணறல்

கொல்கத்தா அணி 9 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 59 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அப்போது கேப்டன் தினேஷ் கார்த்திக் 17, ஷுப்மன் கில் 2 ரன்கள் எடுத்து ஆடி வந்தனர்.

மீட்க வேண்டிய பொறுப்பு

மீட்க வேண்டிய பொறுப்பு

அணியை மீட்க வேண்டிய பொறுப்பு இருந்த நிலையில், ஷுப்மன் கில் 10வது ஓவரில் முதல் பந்தை அடித்து விட்டு ரன் ஓடத் துவங்கினார். பந்து பவுண்டரி கோட்டை தொடும் வரை சென்றது.

தப்புக் கணக்கு

தப்புக் கணக்கு

ஆனால், எல்லைக் கோட்டை தொடும் முன் ரபாடா பந்தை பிடித்து பட்டேலிடம் வீசினார். அவர் அதை எதிர்முனையில் வீசினார். ஆனால், பந்து பவுண்டரியை எட்டி இருக்கும் என தப்புக் கணக்கு போட்ட ஷுப்மன் கில், உறுதியற்ற நிலையில் மூன்றாவது ரன் ஓடத் துவங்கி, ரன் அவுட் செய்யப்பட்டார். பின்னர் கேப்டன் தினேஷ் கார்த்திக், அதிரடி வீரர் ரஸ்ஸல் பொறுப்பாக ஆடி அணியை மீட்டனர்.

மோசமான ரன் அவுட்

மோசமான ரன் அவுட்

பந்து என்ன ஆனது? எங்கே இருக்கிறது? என்பதை சரியாக கணிக்காமல், "பந்து எங்கேயோ ஈரோடு பக்கம், தூத்துக்குடி பக்கம் இருக்கு" என இரண்டு ரன் ஓட வேண்டிய இடத்தில் மூன்று ரன் ஓடி மோசமான முறையில் ரன் அவுட் ஆனார் இளம் வீரர் ஷுப்மன் கில்.

Story first published: Saturday, March 30, 2019, 21:59 [IST]
Other articles published on Mar 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+