ரியல் ஸ்கேமர்னா நீதான்யா.. இவருக்காவா ஸ்ரேயாஸ் ஐயரை தூக்குனீங்க.. ரூ.23.75 கோடிக்கும் ஆப்புதான்!
டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணியின் நட்சத்திர வீரரான வெங்கடேஷ் ஐயர் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர், இந்த சீசனில் 10 இன்னிங்ஸில் விளையாடி வெறும் 142 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இதனால் ரிஷப் பண்ட்-ஐ விடவும், வெங்கடேஷ் ஐயர் தான் பெரிய ஸ்கேமர் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்களை சேர்த்தது. ஒரு கட்டத்தில் கேகேஆர் அணியின் ஸ்கோர் 240 ரன்களை எளிதாக எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, சுமார் 35 ரன்கள் குறைவாக சேர்த்துள்ளது.

அதற்கு நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயரின் மோசமான ஆட்டமே காரணமாக அமைந்துள்ளது. ஏனென்றால் நம்பர் 5 வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 5 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இந்த சீசனில் வெங்கடேஷ் ஐயர் தொடர்ந்து மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார்.
மொத்தமாக 10 போட்டிகளில் விளையாடியுள்ள வெங்கடேஷ் ஐயர் வெறும் 142 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இந்த சீசனில் கேகேஆர் அணியின் மோசமாக விளையாடி வருவதற்கு வெங்கடேஷ் ஐயரும் முக்கியமான காரணம். ஏனென்றால் ஐபிஎல் மெகா ஏலத்தில் வெங்கடேஷ் ஐயரை ரூ.23.75 கோடிக்கு கேகேஆர் அணி வாங்கியது. இதனால் மற்ற வீரர்களை வாங்க முடியாமல் கேகேஆர் அணி பின்னடைவை சந்தித்தது.
அதுமட்டுமல்லாமல் வெங்கடேஷ் ஐயரை வாங்குவதற்காக ஸ்ரேயாஸ் ஐயரை கூட எளிதாக விட்டுக் கொடுத்தது. ரூ.18 கோடிக்கு ரீடென்ஷன் கோரிக்கையை ஸ்ரேயாஸ் ஐயர் கேகேஆர் அணிக்கு முன் வைத்தார். ஆனால் கேகேஆர் அணி ஸ்ரேயாஸ் ஐயரை அவமானப்படுத்தியதோடு, அசால்ட்டாக அணியில் இருந்தும் வெளியேற்றியது.
இந்த ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்ட ஒரேயொரு அரைசதம் விளாசி இருக்கிறார். ஆனால் அவரை விடவும் வெங்கடேஷ் ஐயர் மிகப்பெரிய ஸ்கேமராக இருந்து வருகிறார். இதனிடையே கேப்டன்சியை வெங்கடேஷ் ஐயருக்கு கொடுத்துவிடாமல், அவரை இந்த சீசனோடு வெளியேற்ற கேகேஆர் அணி நிர்வாகம் முன்வர வேண்டும் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications