For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL2024: மேட்மேன் ஆட்டம்.. 228 ஸ்ட்ரைக் ரேட்.. அரண்டு போன கே எல் ராகுல்.. 5 ஓவரில் 72 ரன் குவித்த DC

டெல்லி : 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 15 ஓவரில் 136 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

ஆனால், கடைசி ஐந்து ஓவர்களில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ்-இன் அதிரடி ஆட்டத்தால் 72 ரன்கள் குவித்தது டெல்லி கேபிடல்ஸ். இதை எடுத்து அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. டெல்லி அணியை கட்டுப்படுத்தி விட்டோம் என நினைத்த லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் கடைசி ஐந்து ஓவர்களில் "மேட்மேன்" (Madman) என அழைக்கப்படும் ஸ்டப்ஸ் ஆடிய ஆட்டத்தை பார்த்து மிரண்டு போனார்.

DC vs LSG IPL 2024 Tristan Stubbs hits at a 228 strike rate against the Lucknow Super Giants

இந்த போட்டியில் டெல்லி அணியின் அதிரடி துவக்க வீரர் ஜேக் பிரேசர் மெக்கர்க் இரண்டு பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் போரல் 33 பந்துகளில் 58 ரன்கள் குவித்து மிரள வைத்தார். ஷாய் ஹோப் 27 பந்துகளில் 38 ரன்களும், ரிஷப் பண்ட் 23 பந்துகளில் 33 ரன்களும் குவித்தனர்.

கடைசி 5 ஓவர்களில் அதிக ரன்கள் குவிக்க வேண்டிய நிலையில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 228 ஆக இருந்தது. கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அக்சர் பட்டேல் 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து அவருக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடி இருந்தார்.

லக்னோ அணிக்கு 209 ரன்கள் என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. லக்னோ அணியின் பந்து வீச்சில் நவீன் உல் ஹக் 2 விக்கெட் வீழ்த்தி இருந்தார். ஆனால் அவர் 4 ஓவர்களில் 51 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். பிஷ்னோய் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். அர்ஷத் கான் 3 ஓவர்களில் 45 ரன்கள் வாரி வழங்கி ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினார்.

Story first published: Tuesday, May 14, 2024, 22:41 [IST]
Other articles published on May 14, 2024
English summary
DC vs LSG IPL 2024: Tristan Stubbs hits at a 228 strike rate against the Lucknow Super Giants
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+