Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

DC vs RCB: டெல்லி மைதானத்தில் ரன் மழைக்கு வாய்ப்பு.. டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு

டெல்லி: 2026 ஐபிஎல் தொடரின் 39-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், அதிக ரன் குவித்தாலும் சேஸ் செய்து விடலாம் என்ற நிலை உள்ளது. சமீபத்தில் இதே மைதானத்தில் 264 ரன்கள் குவிக்கப்பட்டும் அந்த அணி தோல்வியைத் தழுவியது. அதேபோன்ற ஒரு அதிரடி ஆட்டத்தை இந்தப் போட்டியிலும் பார்க்க முடியுமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்வதாக அறிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், "டெல்லி மைதானம் ரன் குவிப்பிற்கு மிகவும் சாதகமானது. முதலில் பந்துவீசி எதிரணியை ஓரளவிற்குள் கட்டுப்படுத்தினால், இரண்டாவது இன்னிங்சில் இலக்கை விரட்டுவது எளிதாக இருக்கும். அணியில் உள்ள வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். அதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியிலும் விளையாடுவோம்" என்றார்.

DC vs RCB RCB Wins Toss and Opts to Bowl Against Delhi Capitals Playing XI Impact sub details

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் கூறுகையில், "நானும் டாஸ் வென்றிருந்தால் முதலில் பந்துவீச்சைத் தான் தேர்வு செய்திருப்பேன். மைதானத்தின் எல்லைகள் சிறியதாக இருப்பதால், ஆட்டம் செல்லச் செல்ல ஆடுகளம் பேட்டிங்கிற்கு இன்னும் எளிதாக மாறும். 264 ரன்கள் அடித்தும் ஒரு போட்டியில் தோற்றது வருத்தமாக இருந்தாலும், இது ஒரு நீண்ட தொடர் என்பதால் தவறுகளைத் திருத்திக் கொள்வோம். இன்றைய போட்டியில் முகேஷ் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக துஷ்மந்தா சமீரா மற்றும் கைல் ஜேமிசன் ஆகிய இரு சர்வதேச வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

ஆடுகளம் குறித்து வர்ணனையாளர்கள் கூறுகையில், டெல்லியில் தற்போது 40 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. மைதானத்தின் பக்கவாட்டு எல்லைகள் 63 மீட்டர் மற்றும் நேர் எல்லைகள் 73 மீட்டர் என மிகவும் சிறியதாக இருப்பதால், பேட்டர்கள் எளிதாக சிக்ஸர்களை விளாச முடியும். ஆடுகளம் சற்று வரண்டு காணப்படுவதால், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஓரளவிற்கு ஒத்துழைப்பு கிடைக்கலாம். ஆனாலும், இது முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அணி தனது பந்துவீச்சு பலத்தை அதிகரிக்க புதிய வெளிநாட்டு வீரர்களைக் களமிறக்கியுள்ளது. அதே சமயம், பெங்களூரு அணி தொடர் வெற்றிகளுடன் வலுவான நிலையில் உள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் - ஆடும் 11:

சகில் பராக், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, சமீர் ரிஸ்வி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், அக்சர் படேல் (கேப்டன்), துஷ்மந்த சமீரா, கைல் ஜேமிசன், குல்தீப் யாதவ், டி. நடராஜன்.

டெல்லி கேபிடல்ஸ் - மாற்று வீரர்கள்:

ஆகிப் நபி தார், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகாம், திரிபுரனா விஜய், அபிஷேக் போரல்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஆடும் 11:

விராட் கோலி, தேவதத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், குருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, ரசிக் சலாம் தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மாற்று வீரர்கள்:

ஜேக்கப் பெத்தேல், ஜோர்டான் காக்ஸ், மங்கேஷ் யாதவ், விக்கி ஓஸ்ட்வால், வெங்கடேஷ் ஐயர்.

Story first published: Monday, April 27, 2026, 19:16 [IST]
Other articles published on Apr 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+