Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

DC vs RR: நியாயமே இல்லை.. உறைந்து போன ராஜஸ்தான்.. நடுவர்கள் உதவியுடன் வென்ற டெல்லி

டெல்லி : 2024 ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஜேக் பிரேசர் 20 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் போரல் 36 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் கடைசி நேரத்தில் 20 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். குலாபுதீன் 15 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார்.

இதை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சேஸிங் செய்தபோது அந்த அணியின் துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் 4 ரன்களும், ஜோஸ் பட்லர் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார். ரியான் பராக் 22 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சுபம் துபே அதிரடி ஆட்டம் ஆடி சஞ்சு சம்சனுடன் இணைந்து கூட்டணி அமைத்தார்.

DC vs RR Result IPL 2024 Delhi Capitals beat Rajasthan Royals by 20 runs

50 ரன்களை கடந்து அபாரமாக ரன் குவித்து வந்த சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் அவுட் ஆன விதம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. அவர் சிக்ஸ் அடிக்க முயற்சித்த போது ஷாய் ஹோப் பவுண்டரி கோட்டுக்கு மிக அருகில் கேட்ச் பிடித்தார். கேட்ச் பிடித்த பின் நிலை தடுமாறிய அவர் லேசாக கால்களை பவுண்டரி கோட்டின் அருகே வைத்து பின்னர் கேட்ச்சை உறுதி செய்தார். ஆனால், அவரது ஷூவின் முனை பவுண்டரி கோட்டை உரசியது ரீப்ளேவில் காட்டப்பட்டது.

ஆனாலும் மூன்றாவது அம்பயர் அவருக்கு அவுட் கொடுத்துவிட்டார். சஞ்சு சாம்சன் அதைக் கண்டு அதிர்ந்து போனார். அம்பயரிடம் ரீப்ளேவை சரி பார்க்குமாறு கூறினார். ஆனால், அம்பயர் உறுதியாக அவுட் என கூறிவிட்டதால் வேறு வழியின்றி வெளியேறினார். நான்காவது விக்கெட்டாக சஞ்சு சாம்சன் வெளியேறிய நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் விரைவாக விக்கெட்களை இழக்கத் தொடங்கியது.

அடுத்து சுபம் துபே 12 பந்துகள் 25 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அதன் பின் ஒவ்வொருவராக ஆட்டம் இழக்க அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது. அந்த அணி வெற்றி பெற்றாலும் அம்பயரின் உதவியால் தான் வெற்றி பெற்றது என ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Story first published: Tuesday, May 7, 2024, 23:58 [IST]
Other articles published on May 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+