Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தட்டுத் தடுமாறினாலும் தரமான விக்கெட்.. ஸ்டம்ப் பறக்க அவுட்டான ப்ரித்வி ஷா.. புவனேஸ்வர் மகிழ்ச்சி!!

டெல்லி : 2௦19 ஐபிஎல் தொடரில் தன் முதல் விக்கெட்டை டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கைப்பற்றினார் புவனேஸ்வர் குமார்

1
45772

புவனேஸ்வர் குமார் இந்த ஆண்டு முதல் மூன்று ஐபிஎல் போட்டிகளில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இதில் ஒரு போட்டி தவிர மற்ற போட்டிகளுக்கு புவனேஸ்வர் குமார் தான் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

பௌல்டு அவுட்

பௌல்டு அவுட்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், அந்த அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா 11 ரன்கள் மட்டுமே அடித்து இருந்த நிலையில், புவனேஸ்வர் குமார் பந்தில் பௌல்டு அவுட் ஆனார்.

ஸ்டம்ப் பறந்தது

ஸ்டம்ப் பறந்தது

புவனேஸ்வர் குமார் வீசிய பந்தை சரியாகக் கணிக்கத் தவறினார் ப்ரித்வி ஷா. பந்து ஆஃப் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. ஸ்டம்ப் பறந்து போய் விழ, புவனேஸ்வர் குமார் இந்த ஐபிஎல் தொடரில் தன் முதல் விக்கெட்டை எடுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

தரமான விக்கெட்

தரமான விக்கெட்

நான்கு போட்டிகளில் எடுத்த முதல் விக்கெட் என்றாலும், தரமான விக்கெட்டாக அமைந்தது. ஸ்டம்ப் பறக்க, இந்த சீசனில் 99 ரன்கள் அடித்த ப்ரித்வி ஷா விக்கெட் என்பது புவனேஸ்வருக்கு நல்ல ஆரம்பமாக அமைந்தது.

புவி மகிழ்ச்சி

புவி மகிழ்ச்சி

மேலும், இந்தப் போட்டியில் தன் இரண்டாவது விக்கெட்டாக கிறிஸ் மோரிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இறுதியில் டெல்லி அணியை ஹைதராபாத் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்த, புவனேஸ்வர் குமார் கேப்டனாகவும், பந்துவீச்சாளராகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

Story first published: Friday, April 5, 2019, 0:26 [IST]
Other articles published on Apr 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+