For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படி கள்ள ஆட்டம் ஆடினா அம்பயர் கிட்ட சொல்லுவோம்.. அநியாயத்தை கண்டு பொங்கிய முகமது கைஃப்!!

டெல்லி : ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக இருந்து வருகிறார் முகமது கைஃப்.

தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய காலத்தில் மிகச் சிறந்த பீல்டரக விளங்கியவர் முகமது கைஃப். டெல்லி அணியிலும் பீல்டிங் பயிற்சி அளிக்கவே கைஃப்பை துணை பயிற்சியாளராக சேர்த்துள்ளனர்.

மாற்று பீல்டர்

மாற்று பீல்டர் விதி

மாற்று பீல்டர் விதி

இந்நிலையில், ஒரு வீரர் காயமடைந்தால், அல்லது சோர்வடைந்தால், மாற்று பீல்டர் வைத்துக் கொள்ளலாம் என்ற விதியை மற்ற ஐபிஎல் அணிகள் தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் முகமது கைஃப்.

பியுஷ் சாவ்லா வெளியே

பியுஷ் சாவ்லா வெளியே

டெல்லி - கொல்கத்தா ஆடிய போட்டியில் கொல்கத்தா வீரர் பியுஷ் சாவ்லா தன் 4 ஓவர்களை வீசி முடித்து விட்டு ஆடுகளத்தை விட்டு வெளியே சென்று விட்டார். அவருக்கு பதில் 21 வயதான ரிங்கு சிங் பீல்டிங் செய்தார்.

நல்ல பீல்டர்கள் உள்ளே!

நல்ல பீல்டர்கள் உள்ளே!

பியுஷ் சாவ்லாவிற்கு 30 வயதாகிறது, மேலும், அவர் பீல்டிங்கில் வேகமாக இருப்பதில்லை. இது பற்றி பேசிய கைஃப், மோசமான பீல்டர்களை வெளியேற்றிவிட்டு நல்ல பீல்டர்களை உள்ளே நிற்க வைக்கிறார்கள் என நேரடியாக குற்றம்சாட்டிப் பேசினார்.

சர்ப்ராஸ் கானிற்கு காயம்

சர்ப்ராஸ் கானிற்கு காயம்

இதே போல பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்த போது சர்ப்ராஸ் கானிற்கு கையில் காயம் ஏற்பட்டது எனக் கூறி அவருக்கு பதில் கருண் நாயரை பீல்டிங் செய்ய வைத்தனர்.

சரியாகப்படவில்லை

சரியாகப்படவில்லை

இது குறித்து பேசிய கைஃப், சப்ராஸ் கையில் காயம் ஏற்பட்டது என்றார்கள். ஆனால், பந்து கிளவுஸில் பட்டது போன்று தான் இருந்தது. அணிகள் புத்திசாலித்தனமாக மாற்றங்களை செய்து வருகிறார்கள். எனக்கு அது சரியாகப்படவில்லை. நாங்கள் இதை அம்பயரின் கவனத்திற்கும் கொண்டு செல்வோம் என்றார் கைஃப்.

நியாயம்

நியாயம்

கைஃப் சொல்வது முற்றிலும் நியாயம் தான். கைஃப் ஆடிய காலங்களில் மற்ற வீரர்களை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு அணியில் இடம் பெறாத கைஃப்பை அழைத்து கங்குலி பீல்டிங் செய்ய சொல்வது ஏனோ ஞாபகம் வருகிறது. அதே கங்குலி தான் டெல்லி அணியில் ஆலோசகராக இருக்கிறார்.

Story first published: Thursday, April 4, 2019, 21:26 [IST]
Other articles published on Apr 4, 2019
English summary
DC vs SRH IPL 2019 : Mohammad Kaif thinks IPL teams misusing substitution provision
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+