அப்படி ஆயிடுமோன்னு பயந்தேன்.. சன்ரைசர்ஸ் அணியின் ரஷித் கானுக்கு தோல்வி பயத்தை காட்டிய டெல்லி!!
டெல்லி : 2019 ஐபிஎல் தொடரின் 16வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி வீரர் ரஷித் கான், தன் அணி தோற்று விடுமோ என பயந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஐந்து விக்கெட் வித்தியாசத்தில், 19வது ஓவரிலேயே ஹைதராபாத் வெற்றி பெற்ற நிலையில், தோல்வி பயம் ஏன் வந்தது?

ஹைதராபாத் பேட்டிங்
ஹைதராபாத் அணி டெல்லி நிர்ணயித்த 130 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி பேட்டிங் செய்து வந்தது. துவக்க வீரர் பேர்ஸ்டோ அதிரடியாக 28 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் நிதானமாக ரன் சேர்த்தனர்.

சரிந்த விக்கெட்கள்
13வது ஓவரின் இறுதியில் மனிஷ் பாண்டே ஆட்டமிழந்தார். அப்போது ஹைதராபாத் அணி 95 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இருந்தது. தொடர்ந்து 15வது ஓவரில் விஜய் ஷங்கர், 16வது ஓவரில் ஹூடா ஆட்டமிழந்தனர்.

5 விக்கெட்கள் காலி
இதனால், 95 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு என்ற நிலையில் இருந்து 111 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழப்பு என்ற நிலைக்கு வந்தது. நபி, யூசுப் பதான் பேட்டிங் செய்து வந்தனர். அடுத்து பேட்டிங் செய்ய ரஷித் கான் காத்துக் கொண்டு இருந்தார்.

பதற்றத்துடன் இருந்த ரஷித்
அப்போது ரஷித் கான், இதற்கு முன்பு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 8 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்களை இழந்தது போல தங்கள் அணியும் விக்கெட்களை இழந்து, தோற்று விடுமோ என பயந்துள்ளார்.

பயத்தை காட்டிய டெல்லி
இதனால், தான் பதற்றத்துடன் இருந்ததாகவும், யூசுப், நபி சிறப்பாக ஆடி போட்டியை வெற்றிகரமாக முடித்தார்கள் என்றும் கூறினார் ரஷித் கான். டெல்லி அணி இந்தப் போட்டியிலேயே சிறப்பாக செயல்பட்ட ஒரே தருணம், விரைவாக மூன்று விக்கெட்களை வீழ்த்தியது தான். அதை வைத்து தான் ரஷித் கானுக்கு பயங்காட்டி உள்ளது டெல்லி. எனினும், இலக்கு எளிது என்பதால், ஹைதரபாத் அணி எளிதாக அந்த கண்டத்தில் இருந்து தப்பி வெற்றி பெற்றது.

டெல்லி மைதானம்
இந்தப் போட்டி நடந்த டெல்லி மைதானத்தில் ரன் சேர்ப்பது கடினமான ஒன்றாக இருக்கிறது. மேலும், திடீரென விக்கெட்கள் சரிவதும் அங்கே சகஜமான ஒன்றாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications