Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆமை வேகத்தில் ரன் சேர்த்த டெல்லி.. பிளந்து கட்டிய பேர்ஸ்டோ, நபி.. எளிதாக வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

டெல்லி : 2019 ஐபிஎல் தொடரின் 16வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

1
45772

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. டெல்லி கேபிடல்ஸ் அணி மீண்டும் தன் பழைய டெல்லி டேர்டெவில்ஸ் அணியாக மாறி சொதப்பல் ஆட்டம் ஆடி தோல்வி அடைந்தது.

டெல்லி மோசமான பேட்டிங்

டெல்லி மோசமான பேட்டிங்

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் ப்ரித்வி ஷா 11 ரன்னில் புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து தவான் 12 ரன்களில் நடையைக் கட்டினார். ரிஷப் பண்ட், ராகுல் டெவாடியா, கோலின் இங்கிராம் ஆளுக்கு தலா 5 ரன் எடுத்து ஏதோ எங்களால் முடிந்த உதவி என வெளியேறினர்.

ஸ்ரேயாஸ் போராட்டம்

ஸ்ரேயாஸ் போராட்டம்

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனி ஒருவனாக போராடி 43 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் கிறிஸ் மோரிஸ் 17, அக்சர் பட்டேல் 23 ரன்கள் சேர்த்து டெல்லி அணி 129 ரன்கள் சேர்க்க உதவினர்.

ஆமை வேகம்

ஆமை வேகம்

டெல்லி பேட்டிங்கில் ஆமை வேகத்தில் தான் ரன் சேர்த்தது. 3வது ஓவர் முதல் 19வது ஓவர் வரை ரன் ரேட் 6-ஐ தாண்டவில்லை. அக்சர் பட்டேல் கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்திருக்காவிட்டால் டெல்லி 120 ரன்களையே தாண்டி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் பந்துவீச்சு

ஹைதராபாத் பந்துவீச்சு

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் சித்தார்த் கௌல் ஓவருக்கு 8.75 ரன்கள் கொடுத்து இருந்தார். மற்ற வீரர்கள் ஏழு ரன்னுக்கும் குறைவாகவே கொடுத்தனர். முஹம்மது நபி, ரஷித் கான் சிறப்பாக பந்துவீசி ரன்களை வெகுவாக கட்டுப்படுத்தினர். புவனேஸ்வர் குமார், முஹம்மது நபி, சித்தார்த் கௌல் தலா 2 விக்கெட்களளும், ரஷித் கான், சந்தீப் சர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பேர்ஸ்டோ அதிரடி

பேர்ஸ்டோ அதிரடி

130 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய சன்ரைசர்ஸ் அணிக்கு பேர்ஸ்டோ அதிரடி துவக்கம் அளித்தார். 28 பந்துகளில் 48 ரன்கள் குவித்து அசத்தினார் அவர். வார்னர் 10, விஜய் ஷங்கர் 16, மனிஷ் பாண்டே 10, ஹூடா 10 என சொற்ப ரன்களில் வெளியேற, கடைசி நேரத்தில் நபி 9 பந்துகளில் 17 ரன்கள் குவித்து அணியை 18.3 ஓவர்களில் வெற்றி பெற வைத்தார். யூசுப் பதான் 9 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சிறிய தாக்கம்

சிறிய தாக்கம்

டெல்லி அணியின் பந்துவீச்சு ஹைதராபாத் அணியில் சிறிய தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தியது. 95 ரன்களில் இருந்து 111 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்தது ஹைதராபாத். எனினும், சிறிய இலக்கு என்பதால், நபியின் அதிரடி ஆட்டத்தின் மூலம் அந்த அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லி பந்துவீச்சு

டெல்லி பந்துவீச்சு

டெல்லி அணியின் அக்சர் பட்டேல், ராகுல் டெவாடியா சிறப்பாக பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தினர். எனினும், சந்தீப் லாமிச்சேன், கிறிஸ் மோரிஸ், ரபாடா போன்ற வீரர்கள் ரன்களை வாரி இறைத்தனர்.

புள்ளிப்பட்டியல்

புள்ளிப்பட்டியல்

இந்த வெற்றிக்கு பின் சன்ரைசர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. சன்ரைசர்ஸ் 4 போட்டிகளில் 3இல் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி 5 போட்டிகளில் 2இல் மட்டுமே வென்று ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உள்ளது.

Story first published: Thursday, April 4, 2019, 23:58 [IST]
Other articles published on Apr 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+