Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன்னா இவரை மாதிரி இருக்கணும்.. மீண்டும் ஒரு முறை வீரர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய தோனி!!

Recommended Video

IPL 2019: Chennai vs Delhi | மீண்டும் ஒரு முறை வீரர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய தோனி!

டெல்லி : டெல்லியில் நடைபெற்ற 2019 ஐபிஎல் தொடரின் ஐந்தாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் தோனி அணித்தேர்வில் ஒரு ஆச்சரியம் அளித்தார். முதல் போட்டியில் களமிறங்கிய அதே அணியை தோனி டெல்லியிலும் ஆட வைத்தார்.

மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள்

மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள்

முதல் போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு பெரிதும் ஒத்துழைத்தது. இதை முன்பே கணித்து மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை களம் இறக்கினார் தோனி.

மாற்றம் இருக்கும்?

மாற்றம் இருக்கும்?

அது பெரிய அளவில் வேலை செய்தது. 70 ரன்களுக்கு பெங்களூர் அணி சுருண்டது. அந்த போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், டெல்லி போட்டியில் நிச்சயம் 1 சுழற் பந்துவீச்சாளரை தோனி குறைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

தாக்குர், தீபக் சாஹர்

தாக்குர், தீபக் சாஹர்

ஆனால், தோனி முதல் போட்டியில் ஆடிய அதே அணியை டெல்லியிலும் ஆடவைத்துள்ளார். அதிலும், அனுபவம் குறைந்த ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர் எப்படி பந்துவீசுவார்கள் என தெரியாத நிலையில், அவர்களை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் அணியில் சேர்த்துக் கொண்டுள்ளார்.

வாட்சன், பிராவோ இருந்தும்

வாட்சன், பிராவோ இருந்தும்

ஷேன் வாட்சன், பிராவோ போன்ற வேக, மிதவேகப் பந்துவீச்சாளர்கள் அணியில் இருந்தும், அனுபவமிக்க அந்த இருவருமே கூட நான்கு ஓவர்களை வீசி முடித்து விட முடியும். ஆனால் அவர்களுடன் இந்திய வீரர்கள் இருவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்துள்ளார் தோனி.

வீரர்களை நம்புவார்

வீரர்களை நம்புவார்

தோனி தனது கேப்டன்சியில் எப்போதும் வீரர்களை நம்புவார் என கூறுவார்கள். அதை மீண்டும் ஒருமுறை கண் முன் நடத்திக் காட்டியுள்ளார். தோனி தன் வீரர்களை நம்புவதால் தான் சிறந்த கேப்டனாக வலம் வருகிறார்.

Story first published: Tuesday, March 26, 2019, 21:13 [IST]
Other articles published on Mar 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+