Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லி டீம்.. ஏன் இப்படி? வாட்சனுடன் சண்டை போட்ட இஷாந்த்! கேலி செய்த ரபாடா! பாண்டிங் பஞ்சாயத்து!

Recommended Video

IPL 2019: Chennai Vs Delhi: வாட்சனுடன் சண்டை போட்ட இஷாந்த்!.. கேலி செய்த ரபாடா!- வீடியோ

டெல்லி : சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்தது ஷேன் வாட்சன். அவர் 26 பந்துகளில் 44 ரன்கள் குவித்து, டெல்லி நிர்ணயித்த 148 ரன்கள் இலக்கை எட்ட உதவினார். அதே சமயம், போட்டியின் இடையே இஷாந்த் சர்மா மற்றும் ரபாடா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இஷாந்த் வாக்குவாதம்

இஷாந்த் வாக்குவாதம்

சென்னை அணியின் பேட்டிங்கின் போது முதல் விக்கெட்டாக அம்பதி ராயுடுவின் விக்கெட்டை வீழ்த்தினார் டெல்லி அணியின் வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா. விக்கெட் வீழ்ச்சியை அவர் கொண்டாடிக் கொண்டு இருந்த போது, வாட்சனுக்கும், இஷாந்துக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.

குற்றம்சாட்டினர்

குற்றம்சாட்டினர்

இருவரும் கையை நீட்டி, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பேசி வந்தனர். இதனால், சிறிய பதற்றம் நிலவியது. பின்னர் அம்பயர் மற்றும் டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலையிட்டனர். ஸ்ரேயாஸ் ஐயர், இஷாந்த் சர்மாவை சமாதானம் செய்து அழைத்துச் சென்றார்.

ரபாடா, வாட்சன் மோதல்

அடுத்த சில ஓவர்களில் டெல்லி பந்துவீச்சாளர் ரபாடா, வாட்சன் பிட்ச்சில் ஓடினார் எனக் கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, கேப்டன், அம்பயர் என அனைவரும் சமாதானம் செய்தும் ரபாடா தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தார்.

கேலி செய்த ரபாடா

கேலி செய்த ரபாடா

வாட்சன் தான் பிட்ச்சில் ஓடவில்லை என மறுத்துக் கூறிய போது கேலியாக கை தட்டி "அப்படியா" என ரபாடா சிரித்துக் கொண்டே கூறிச் சென்றார். அம்பயரும் சிரித்துக் கொண்டு நின்றது தான் இதில் வேடிக்கை!!

ரிக்கி பாண்டிங் சமாதானம்

போட்டி முடிந்த பின்னர், டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ஷேன் வாட்சன் மற்றும் ரபாடா இருவரையும் அழைத்து பஞ்சாயத்து செய்து, சமாதானம் செய்து வைத்தார். இருவரும் என்ன நடந்தது என விளக்கிக் கூற ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு வந்தது.

Story first published: Wednesday, March 27, 2019, 13:24 [IST]
Other articles published on Mar 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+