Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - ஆஸி. 3வது ஒருநாள் போட்டி - எந்த சேனலில் இலவசமாக பார்க்கலாம்? ஜியோ சினிமாவில் இலவசமா?

சென்னை : இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது.
முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2 - 0 என்ற நிலையில் கைப்பற்றி இருக்கிறது.

2023 உலகக்கோப்பை தொடரின் முன்னோட்டமாக இந்த தொடர் நடக்கிறது. அதனால், ஆஸ்திரேலியா இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து இருப்பதால் நிச்சயம், மூன்றாவது போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும். அதன் மூலம், உலகக்கோப்பைக்கு முன் தன்னம்பிக்கையை பெற அந்த அணி திட்டமிடும்.

DD sports or Jio Cinema, where to watch India vs Australia 3rd ODI for free?

கடந்த இரண்டு போட்டிகளில் ஓய்வில் இருந்த அணியின் முன்னணி வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அணிக்கு திரும்ப உள்ளனர்.

அதனால், மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்தப் போட்டியை எந்த தொலைக்காட்சி சேனலில் பார்க்கலாம்? எந்த ஆப்-பில் இலவசமாக பார்க்கலாம்? தூர்தர்ஷனின் டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இந்த போட்டி ஒளிபரப்பப்படுமா? போன்ற கேள்விகளுக்கான பதில் இங்கே -

போட்டி நடக்கும் இடம் மற்றும் நேரம் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி - ராஜ்கோட் மைதானம் - நேரம் : மதியம் 1.30 மணி.

தொலைக்காட்சி ஒளிபரப்பு : ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் இந்தப் போட்டியைக் காணலாம். இதைத் தவிர டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் காணலாம். டிடி ஸ்போர்ட்ஸ் இலவச DTH டிஷ்-இல் உள்ளது. மற்ற டிஷ் டிவிக்களிலும் இலவச சேனலாகவே பார்க்கலாம்.

எந்த ஆப்-பில் பார்க்கலாம்? : இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் முழுவதும் ஜியோ சினிமாவில் இலவசமாகவே பார்க்கலாம். அதிலும் பல்வேறு கேமரா கோணங்கள், ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் பார்க்கலாம்.

இந்தியா - ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டியில் ஆட உள்ள உத்தேச இந்திய அணி விவரம் : ரோஹித் சர்மா (கேப்டன்), ருதுராஜ் கெயிக்வாட், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அஸ்வின், ஷர்துல் தாக்குர், பும்ரா, சிராஜ்

Story first published: Tuesday, September 26, 2023, 10:15 [IST]
Other articles published on Sep 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+