For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கே இருக்க முடியாது! டெல்லி மாநில கிரிக்கெட் தலைவர் பதவியை உதறிய ரஜத் சர்மா. பரபர குற்றச்சாட்டு!

டெல்லி : டெல்லி கிரிக்கெட் அமைப்பின் (DDCA) தலைவர் பதவியில் இருந்து ரஜத் சர்மா விலகினார்.

கிரிக்கெட் நிர்வாகத்தில் நிறைய அழுத்தம் இருப்பதாக குறிப்பிட்டு இருப்பது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பில் கோலோச்சி வந்த மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆதரவால் தலைவர் பதவியை பெற்ற ரஜத் சர்மாவுக்கு, அவரது மறைவுக்குப் பின் எதிர்ப்பு கிளம்பி வந்தது. இந்த நிலையில், தற்போது அவர் பதவி விலகி இருக்கிறார்.

20 மாதங்களுக்கு முன்பு..

20 மாதங்களுக்கு முன்பு..

கடந்த 20 மாதங்களுக்கு முன்பு தான் மூத்த பத்திரிக்கையாளரான ரஜத் சர்மா டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் தலைவர் பதவியில் அமர்ந்தார். அந்த அமைப்பில் பல்வேறு குழுக்கள் இருக்கின்றன. அவர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.

மோதல் போக்கு

மோதல் போக்கு

ரஜத் சர்மாவுக்கு, பொதுச் செயலாளர் வினோத் திஹாராவுடன் பெரிய அளவில் மோதல் போக்கு இருந்து வந்தது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகவே இருந்தது. மேலும், பலரின் ஆதரவும் வினோத் திஹாராவுக்கு இருந்தது.

அழுத்தம் உள்ளது

அழுத்தம் உள்ளது

அந்த அமைப்பில் நிலவிய எதிர்ப்பை அடுத்து பதவி விலகி இருக்கும் ரஜத் சர்மா, "கிரிக்கெட் நிர்வாகம் எப்போதும் நிறைய இழுப்பு மற்றும் அழுத்தம் நிறைந்ததாக உள்ளது. எப்போதுமே கிரிக்கெட்டுக்கு எதிராகவே ஈடுபாடு அதிகம் இருப்பதாக நான் நினைக்கிறேன்" என்றார்.

வெளிப்படைத்தன்மை

வெளிப்படைத்தன்மை

மேலும், தன்னுடைய கொள்கைகள், நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பில் தொடர்வது சாத்தியமில்லை என்றும் கூறி உள்ளார்.

அதிகாரிகள் விலகல்

ரஜத் சர்மா பதவி விலகிய சில மணி நேரங்களில் தலைமை செயல் அதிகாரி ரவி சோப்ரா, கிரிக்கெட் ஆலோசனை குழு உறுப்பினர்கள் சுனில் வல்சன் மற்றும் யாஷ்பால் சர்மா பதவி விலகினர்.

Story first published: Saturday, November 16, 2019, 17:38 [IST]
Other articles published on Nov 16, 2019
English summary
DDCA President Rajat Sharma resigns his post. He claimed cricket administration is full of pulls and pressures.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X