Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லி, டி வில்லியர்ஸ் அசத்தல் ஆட்டம் வீண்.. டி காக் சதத்தால் பெங்களூரை வீழ்த்தியது டெல்லி

பெங்களூர்: பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் லீக்கின் 11வது ஆட்டத்தில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாகீர் கான் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து கெயிலும், கோஹ்லியும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

வழக்கம்போல சொதப்பிய கெயில், ஜாகீர் கான் பந்து வீச்சில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார். இதன்பிறகு கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்தார் டி வில்லியர்ஸ். இந்த ஜோடி அபாரமாக அடித்து ஆடி 107 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் கொண்டு வந்தது.

அபார அரை சதங்கள்

அபார அரை சதங்கள்

33 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்த டி வில்லியர்ஸ் பிராத்வெயிட் பந்து வீச்சில் அவுட் ஆனார். வாட்சன் 19 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு களமிறங்கிய வீரர்களால் வேகமாக ரன் குவிக்க முடியவில்லை. விராட் கோஹ்லி 48 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

கொஞ்சம் கம்மிதான்

கொஞ்சம் கம்மிதான்

இதையடுத்து பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 200 ரன்களை தாண்டும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், மோரிஸ் பந்து வீச்சு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. இதையடுத்து, 192 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களமிறங்கியது.

முதலில் ஆட்டம் கண்டது

முதலில் ஆட்டம் கண்டது

தொடக்க ஆட்டகாரர் சிரேயாஸ் அற்புதமான ஒரு கேட்ச் மூலம் 0 ரன்னில் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து களமிறங்கிய சாம்சன் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அபார வெற்றி

அபார வெற்றி

ஆனால் டி காக், கருண் நாயர் ஜோடி, பெங்களூர் அணி பந்து வீச்சை நாலாபுறமும் விரட்டி ரன் குவித்தனர். அதிரடியாக ஆடிய டி காக் 48 பந்துகளில் சதம் அடித்து கலக்கினார். கருண் நாயரும் அரை சதம் அடித்தார். இறுதியில் டெல்லி அணி 19.1 ஓவரில் 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்க வீரர்கள்

தென் ஆப்பிரிக்க வீரர்கள்

108 ரன்கள் குவித்த டி காக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டி வில்லியர்சும், டி காக்கும், உலக கோப்பையில் சோபிக்கவில்லை என்றபோதிலும், ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 18, 2016, 11:53 [IST]
Other articles published on Apr 18, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+