Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏங்க அவரை டென்ஷன் படுத்தறீங்க... அவரோட கவனம்தான் சிதறும்... பீட்டர்சன் ஆதங்கம்

லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி உள்ளிட்ட 4 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து தோல்வி கண்டுள்ளது.

சமீபத்தில் ரஹானே தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டுள்ளதையடுத்து டெஸ்ட் கேப்டன்ஷிப்பை அவருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இந்நிலையில் இத்தகைய விவாதங்களால் கோலியின் கவனம் மேலும் சிதறும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

மோசமான தோல்வி

மோசமான தோல்வி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் மற்றும் முன்னதாக நியூசிலாந்து இடையிலான 2 டெஸ்ட் போட்டி என தொடர்ந்து 4 போட்டிகளில் தோற்றுள்ளது.

சிறப்பான வெற்றி

சிறப்பான வெற்றி

ஆனால் கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று நாடு திரும்பியுள்ளது. எந்த பதற்றமும் இல்லாமல் இந்த வெற்றியை இந்திய அணி சாத்தியப்படுத்தியது. இதையடுத்து ரஹானேவிடம் டெஸ்ட் கேப்டன்ஷிப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

ரஹானேவிடம் ஒப்படைக்க கோரிக்கை

ரஹானேவிடம் ஒப்படைக்க கோரிக்கை

இந்நிலையில் டெஸ்ட் கேப்டன்ஷிப்பை விராட் கோலியிடம் இருந்து ரஹானேவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற விவாதங்கள் விராட் கோலியின் கவனத்தை மேலும் சிதறடிக்கும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். அவருடைய பிளாக்கில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

விவாதங்களை தவிர்க்க முடியும்

விவாதங்களை தவிர்க்க முடியும்

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இத்தகைய விவாதங்களை விராட் கோலி தற்போதைக்கு தவிர்க்க முடியும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஒரு அணியின் கேப்டனாக செயல்படுவது மிகவும் சிரமமான விஷயம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Friday, February 12, 2021, 14:04 [IST]
Other articles published on Feb 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+