Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹனுமா.. சூப்பர்மா.. முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்த விஹாரி !

லண்டன் : இந்தியா - இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்தாம் டெஸ்ட் போட்டியில் தன் முதல் போட்டியில் ஆடும் ஹனுமா விகாரி அரைசதம் அடித்து ஆடி வருகிறார்.

இந்தியா நேற்று 174 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து தவித்து வந்தது. இறுதியாக ஜடேஜா, ஹனுமா விஹாரி களத்தில் இருந்தனர். இவர்கள் இந்திய அணியை காப்பாற்றுவார்களா? என்ற கேள்வியோடு இன்றைய ஆட்டம் துவங்கியது.

Debutant Hanuma Vihari knocked a half century against England at Oval

ஜடேஜா, ஹனுமா இருவரும் இணைந்து கூட்டணி அமைத்து ஆடி வருகின்றனர். இவர்கள் கூட்டணி 50 ரன்களை கடந்து ஆடி வருகிறது. அதே சமயம் தன் முதல் போட்டியில் ஆடி வரும் ஹனுமா விஹாரி அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். இவர் 104 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஜடேஜா இந்த தொடரில் முதல் நான்கு போட்டிகளில் அணியில் சேர்க்கப்படாமல் இருந்து இப்போதுதான் வாய்ப்பு பெற்றுள்ளார். அதே போல, முதல் தர போட்டிகளில் மிக அதிக சராசரி வைத்து இருந்தும் நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வந்த ஹனுமா விஹாரியும் முதல் முறையாக வாய்ப்பு பெற்றார்.

இவர்கள் இருவரும் இந்திய அணியின் ரன்களை உயர்த்தி வருகின்றனர். இந்தியா தற்போது 231 ரன்கள் எடுத்து 6 விக்கெட் இழந்துள்ளது. ஹனுமா 55, ஜடேஜா 34 ரன்களக் எடுத்து ஆடி வருகின்றனர். இந்தியா 101 ரன்கள் பின்தங்கி உள்ளது.

Story first published: Sunday, September 9, 2018, 17:34 [IST]
Other articles published on Sep 9, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+