ஐபிஎல்: டெல்லியை வீழ்த்திய டெக்கான்!!

டெல்லியில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.
முன்னதாக டாஸ் வென்ற டெக்கான் கேப்டன் குமார் சங்ககரா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான தவாண் 8 ரன்களில் பதான் பந்துவீச்சில் போல்டு ஆகி வெளியேறினார். அதன்பிறகு வந்த சோஹலு கேப்டன் சங்ககரா ஜோடி விக்கெட் விழாமலும், அதே நேரத்தில் வேகமாகவும் ஆடியது. இதனால் அணியின் ஸ்கோர் 11 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.
சங்ககரா 35 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சோஹல் 41 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் சேர்த்து வெளியேறினார். கடைசிக் கட்டத்தில் ஒயிட் சற்று அதிரடி காட்ட டெக்கான் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.
பின்னர் பேட் செய்த டெல்லி அணியில் சேவாக்கும், வார்னரும் தொடக்க வீரர்களாக களம் கண்டனர்.
அணியின் ஸ்கோர் 28 ரன்கள் எட்டியபோது, சேவாக் 12 ரன்களில் ஆட்டமிழந்து டெல்லி ரசிகர்களை ஏமாற்றினார். இதன்பிறகு வந்த ஓஜா 2 ரன்களிலும், பிஞ்ச் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
வார்னர் 48 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்வரிசையில் வந்த நாகர் அதிரடியாக விளையாடினாலும், அவர் சட்டென்று அவுட்டாக, அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்களில் தோல்வி கண்டது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று டெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெக்கான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக சன்னி சோஹல் 41 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 62 ரன்களும், சங்கக்கரா 35 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 49 ரன்களும் எடுத்தனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:46 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications