Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி' - அதிகரிக்கும் குல்தீப் ஆதரவு குரல்

மும்பை: சென்னை டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் ஏன் சேர்க்கப்படவில்லை என்று தீப் தாஸ் குப்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்ட் தொடர் 'ஒரே அசிங்கமா போச்சு குமாரு' மோடில் சென்றுக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்து ஏதோ தங்கள் எட்ஜ்பாஸ்டன் கிரவுண்டில் குளிர்கால சீதோஷ்ணத்தை ரசித்து கிரிக்கெட் ஆடுவதைப் போல, சென்னை வெயிலில் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜோ ரூட், 150 ரன்கள் கடந்து சாவகாசமாக கடை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறார். அவர்கள் அடிப்பதை பார்த்தால் 700 தாண்டிவிடுவார்கள் போல.

 அவருக்கான வாய்ப்பு எங்கே?

அவருக்கான வாய்ப்பு எங்கே?

இந்நிலையில், அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது குறித்து முன்னாள் விக்கெட் கீப்பர் தீப் தாஸ் குப்தா கூறுகையில், ஆஸ்திரேலிய தொடரில் குல்தீப்பை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், தேர்வு செய்யவில்லை. இப்போது சென்னையிலும் அவருக்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் சேர்க்கப்படவில்லை.

 குல்தீப் எங்கே?

குல்தீப் எங்கே?

எண்ணில் எழும் கேள்வி, அவர் தற்போது என்ன இடத்தில் இருக்கிறார்? இது மிக முக்கியமான கேள்வி என்று நினைக்கிறேன். குல்தீப் போன்ற ஒருவருக்கு இந்த கேள்விக்கான விடை தெரிய வேண்டும். அணியில் தேர்வாக அவர் இன்னும் என்ன தான் செய்ய வேண்டும்?

 பிசிசிஐயின் பதில் வேண்டும்

பிசிசிஐயின் பதில் வேண்டும்

அவர் இன்னும் இளமையுடன் இருக்கிறார். அவர் வசம் இன்னும் நிறைய கிரிக்கெட் மீதமுள்ளது. அதற்காகவே அவர் இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள வேண்டும். அவரிடம் இருந்து அணி என்ன எதிர்பார்க்கிறது, எப்போது அவர் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்த சில வழிகாட்டுதல்கள் அவருக்கு தெரிய வேண்டும்.

 திறமையான பவுலர்

திறமையான பவுலர்

என்னைப் பொறுத்தவரை, குல்தீப்பிடம் இன்னும் எண்ணற்ற கிரிக்கெட் மீதமுள்ளது. அவர் உண்மையில் ஒரு திறமையான பவுலர்.மேட்ச் வின்னரும் கூட" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் உள்ளிட்ட சில வீரர்கள் குல்தீப் சேர்க்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 பிசிசிஐ-யின் நோக்கம் என்ன?

பிசிசிஐ-யின் நோக்கம் என்ன?

சிக்கல் என்னவெனில், குல்தீப் அனைத்து டெஸ்ட் தொடருக்கும் தேர்வு செய்யப்படுகிறார். அழைத்துச் செல்லப்படுகிறார். உட்கார வைக்கப்படுகிறார். இது தான் தொடர்ந்து நடக்கிறது. ஆனால், அவருக்கு பிறகு அணியில் வரும் வீரர்களுக்கு கூட தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும் போது, அவர் மட்டும் ஏன் பெஞ்சில் உட்கார வைக்கப்படுகிறார்? என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

Story first published: Saturday, February 6, 2021, 13:21 [IST]
Other articles published on Feb 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+