Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்படி இருந்தால் வீரர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்..பிட்ச் சர்ச்சையில் முன்னாள் வீரர் புதிய விளக்கம்

அகமதாபாத்: பிட்ச் குறித்த சர்ச்சை வலுத்து வரும் நிலையில் முன்னாள் வீரர் தீப் தஸ்குப்தா தெரிவித்துள்ள கருத்து அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது.

இந்தியவுடனான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததற்கு பிட்ச் முக்கிய காரணமாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மோசமான பிட்ச் என்னவென்றால் எப்படி இருக்கும் என முன்னாள் வீரர் தீப் தஸ்குப்தா தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் பிட்ச்

அகமதாபாத் பிட்ச்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டியில் தொடக்கம் முதலே பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாய் அமைந்தது. மொத்தம் இரண்டே நாட்களில் முடிவடைந்த இப்போட்டியில் 30 விக்கெட்கள் எடுக்கப்பட்டன. அதில் 28 விக்கெட்கள் ஸ்பின்னர்கள் எடுத்தவையாகும். இதனால் பிட்ச் மீது பலரும் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

மோதிரா மைதான பிட்ச் மோசமானது என முன்னாள் வீரர்கள் டேவின் லாய்ட், அலெஸ்டர் குக், ஆண்ட்ரூவ் ஸ்ட்ரெஸ் உள்ளிட்டோர் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதற்கு எதிராக சுனில் கவாஸ்கர், ஜிவ்ராய் பாய்காட், கெவின் பீட்டர்சன், க்ரீம் ஸ்வான், கோலி, நாதன் லைன் ஆகியோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மோசமான பிட்ச் எது?

மோசமான பிட்ச் எது?

இது குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் தீப் தஸ்குப்தா, மோசமான பிட்ச் என்றால் சரியான பந்துகளை வீசினாலும் அது பவுன்ஸாகி பேட்ஸ்மேன்களுக்கு ஆபத்து தரக்கூடியவையாகும். மேலும் எந்த பவுலர்களுக்குமே ( ஸ்பின் & ஃபாஸ்ட்) விக்கெட் எடுக்காத உதவாத பிட்ச் தான் மோசகமான பிட்ச் ஆகும் என தெரிவித்துள்ளார்.

தற்போதைய கிரிக்கெட்

தற்போதைய கிரிக்கெட்

சமீப காலமாக பிட்ச் குறித்து பேசுவது ட்ரெண்டாகி வருகிறது. முன்பெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் தட்டையாக இருக்கும். இது பேட்ஸ்மேன்களுக்கு உதவும் வகையில் இருக்கும். ஆனால் தற்போதைய டெஸ்ட் பிட்ச்கள் பவுலிங்கிற்கு சாதகமாக அமைக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

அடுத்த டெஸ்ட்

அடுத்த டெஸ்ட்

பிட்ச் குறித்து இங்கிலாந்து அணி ஐசிசியிடம் புகார் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி அதே மோதிரா மைதானத்தில் வரும் மார்ச் 4ம் தேதி நடக்கவுள்ளது. இதுவும் பிங்க் பால் போட்டி என்பதால் பிட்ச் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Tuesday, March 2, 2021, 11:36 [IST]
Other articles published on Mar 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+