Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒத்தைக்கு ஒத்த வரியா.. இன்ஸ்டாகிராமில் மோதிய தீபக் சஹர் - சிவம் துபே.. பரபரக்கும் சிஎஸ்கே வீரர்கள்!

மும்பை: சென்னை அணியின் நட்சத்திர வீரர்களான சிவம் துபே - தீபக் சஹர் இருவரும் இன்ஸ்டாகிராம் தளத்தில் பேசிய பதிவு ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி 5வது முறையாக சென்னை அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதன் மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற மும்பை அணியின் சாதனையை சென்னை அணி சமன் செய்தது. அதுமட்டுமல்லாமல் 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும், 12 முறை ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறிய ஒரே அணி என்ற சாதனையையும் சென்னை அணி படைத்துள்ளது.

Deepak Chahar and Shivam dube cinversation regarding a spot in CSK Playing IX is trending

மொத்தமாக விளையாடிய 14 சீசன்களில் 2 முறை மட்டுமே சென்னை அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. அந்த அளவிற்கு சீரான ஆட்டத்தை சென்னை அணிக்காக ஆடிய வீரர்கள் வெளிப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் சென்னை அணியின் ஆல்டைம் பிளேயின் லெவனை சிஎஸ்கே இளம் வீரர் சிவம் துபே தேர்வு செய்துள்ளார். அதில், கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக வழக்கம் போல் தோனியை தேர்வு துபேவும் தேர்வு செய்துள்ளார்.

அதேபோல் தொடக்க வீரராக மேத்யூ ஹெய்டன், மைக்கேல் ஹசி, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ஆல்பி மார்கல், டுவைன் பிராவோ, ஹர்பஜன் சிங், எல் பாலாஜி ஆகியோரை தேர்வு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கடைசி வீரராக தன்னை தானே சிவம் துபே தேர்வு செய்து கொண்டுள்ளார். இந்தப் பதிவுக்கு கீழ் சிஎஸ்கே ஆல்ரவுண்டர் தீபக் சஹர், அடுத்த ஆண்டு நீங்கள் பவுலராக விளையாடினால், எனக்கு அணியில் எப்படி இடம் கிடைக்கும்?

நாம் இருவரும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் ஒத்தைக்கு ஒத்தையாக ஒரேயொரு ஓவர் வீசி ஒரு போட்டியில் விளையாடலாம். அந்தப் போட்டியில் யார் வெல்கிறார்களோ, அவர்கள் அணியில் இடம்பிடிக்கலாம் என்று கமெண்ட் செய்தார். இதற்கு பதிலளித்த சிவம் துபே, உனக்காக நான் என் இடத்தை காலியாக வைத்திருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார். சிஎஸ்கே வீரர்களின் இந்த உரையாடல் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Story first published: Monday, August 7, 2023, 15:01 [IST]
Other articles published on Aug 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+