Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தீபக் சாஹரின் அபார பந்துவீச்சு.. அடுத்தடுத்து சரிந்த ஜிம்பாப்வே விக்கெட்..முதல் வெற்றியை நோக்கி ராகுல்

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக பந்துவீசி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தியது.

Recommended Video

IND vs ZIM இந்திய வீரர் Deepak Chachar பந்துவீச்சில் Zimbabwe தடுமாற்றம்

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இஷான் கிஷன், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தது.

இதே போன்று சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர், இந்திய அணிக்கு 6 மாதத்திற்கு பிறகு திரும்பினார். போட்டி காலையில் தொடங்கியதால் ஆடுகளம் சிறிது நேரம் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட்டது.

தீபக் சாஹர் அபாரம்

தீபக் சாஹர் அபாரம்

இதனை நன்கு பயன்படுத்தி கொண்ட இந்திய அணி வீரர்கள், அபாரமாக பந்துவீசி, ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக தீபக் சாஹர் வழக்கம் போல் பந்தை இரண்டு புறமும் ஸ்விங் செய்ய, அதனை எதிர்கொள்ள முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் தடுமாறினர். தொடக்க வீரர் இன்னசண்ட் காலா 4 ரன்களிலும், மறுமானி 8 ரன்களிலும் தீபக் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

தடுமாறிய நடுவரிசை

தடுமாறிய நடுவரிசை

இதே போன்று வீஸ்லி 5 ரன்களில் தீபக் சாஹர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென் வில்லியம்ஸ் 1 ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் வெளியேறினார். வங்கதேசத்துக்கு எதிராக சதம் விளாசிய சிக்கந்தர் ராசா, இந்தியாவுக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் ராசா 12 ரன்களில் வெளியேறினார்.

கடும் போராட்டம்

கடும் போராட்டம்

ஜிம்பாப்வே அணி கடுமையாக தடுமாறிய போது, கேப்டன் ரிஜிஸ் சக்பவா மட்டும் தனி ஆளாக போராடி 35 ரன்கள் எடுத்து அக்சர் பந்துவீச்சில் போல்ட் ஆனார். ஒரு கட்டத்தில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டு இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 9 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிராட் இவன்ஸ் மற்றும் ரிச்சர்ட்ஸ் பொறுமையாக விளையாடினர்.

9வது விக்கெட் அரைசதம்

9வது விக்கெட் அரைசதம்

இருவரும் ஜிம்பாப்வே அணிக்கு கௌரவமான இலக்கை பெற்று தர வேண்டும் என போராடினர். ஆட்டம் செல்ல செல்ல, ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறியது. இத்னையடுத்து இந்த ஜோடி பவுண்டரிகளை விளாசி, 9வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதனையடுத்து 40.3வது ஓவரில் ஜிம்பாப்வே அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சு தரப்பில் அக்சர் பட்டேல், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Story first published: Thursday, August 18, 2022, 17:17 [IST]
Other articles published on Aug 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+