VIDEO:என்ன தான் நடக்குது? கெயில் காலை பிடித்த தீபக் சாஹர்... வைரல் வீடியோ
Recommended Video
மொகாலி:பஞ்சாப் அதிரடி வீரர் கெய்லின் காலை பிடித்து சென்னை வீரர் தீபக் ஷகர் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் லீக் போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக டு பிளெசிஸ் 96 ரன்களும், சுரேஷ் ரெய்னா 53 ரன்களும் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 18 ஓவர்களின் முடிவில் 173 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதிரடி ராகுல்
அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் களமிறங்கினர். ஆரம்பம் முதலே ராகுல் அதிரடியாக ஆடி சென்னை பந்து வீச்சாளர்களை அதிர வைத்தார். 108 ரன்களில் தான் சென்னை அணியால் எதிரணியின் முதல் விக்கெட்டை பறிக்க முடிந்தது.

நகைச்சுவை சம்பவம்
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஒரு நகைச்சுவையான சம்பவம் அரங்கேறியது. 9வது ஓவரின் போது சென்னை அணி வீரர் தீபக் சாஹர், கெய்லுடன் குறும்பாக காலைப் பிடித்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது 9வது ஓவரின் முதல் பந்தை வீசிகிறார் தீபக். அதனை எதிர்கொள்ளும் ராகுல் வேகமாக விளாசுகிறார்.

காலுக்குள் புகுந்த பந்து
அந்த பந்தை நேராக நான் ஸ்டிரைக் பகுதியில் உள்ள ஸ்டெம்புகளை பதம் பார்க்கிறது. அதில் இருந்து பெயில்ஸ் கீழே விழுகிறது. அப்போது அங்கிருந்த கெயில் கால் அருகே மெதுவாக அந்த பந்து செல்கிறது. மட்டையை கிரிசின் உள்ளே வைத்து கொண்ட கெய்லின் காலுக்குள் பந்து நகர்கிறது.
வைரல் வீடியோ
அந்த பந்தை எடுக்கும் போது தீபக், கெயிலின் காலை பிடித்து எடுக்கிறார். இந்த சுவாரசிய சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலாகி உள்ளது. விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ள கெயில் முயல்வதும், எப்படியாவது அந்த பந்தை எடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தீபக் சாஹர் இருப்பதும் அந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications