நோட் பண்ணிக்கோங்க.. ஹர்திக் பாண்ட்யாவை வைத்து தீபக் சஹார் விட்ட சவால்.. நிறைவேறுமா??
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்படும் ஹர்திக் பாண்ட்யாவை போல தான் நானும் செயல்படுவேன், விரைவில் அணிக்கு திரும்புவேன் என நட்சத்திர வீரர் ஒப்பீடு செய்துள்ளார்.
இந்திய அணியில் தற்போது யாராலும் தகர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறார் ஹர்திக் பாண்ட்யா. பெரும் காயத்தினால் பல மாதங்களாக சிறப்பாக விளையாட முடியாமல் விமர்சனங்களை சந்தித்த அவர் யாருமே எதிர்பார்க்காத கம்பேக்கை தந்தார்.
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை பாண்ட்யா வழிநடத்துகிறார் என்று அறிவித்தவுடன் ரசிகர்கள் விமர்சிக்க தான் தொடங்கினர். ஆனால் அந்த தொடரில் பாண்ட்யா விளையாடிய விதமும், கேப்டன்சியும் கோப்பையை வென்றுக்கொடுத்தது.

இந்தியாவின் பலம்
அன்று முதல் இன்று வரை பாண்ட்யாவை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. முன்பை போல இல்லாமல் மிகவும் நிதானமான செயல்பட்டு வருகிறார். சூழலுக்கு ஏற்ப ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து, எந்த இடத்தில் வேண்டுமோ அந்த இடத்தில் அதிரடி காட்டுகிறார். இதனால் அப்படியே தோனியை போலவே பாண்ட்யா இருக்கிறார் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

தீபக் சஹார் கருத்து
இந்நிலையில் பாண்ட்யாவை போல தான் தானும் செயல்படுவேன் தீபக் சஹார் கூறியுள்ளார். பெரும் காயத்தால் பாதிக்கப்பட்ட தீபக் சஹார் நீண்ட நாட்களாக கம்பேக் கொடுப்பதற்காக போராடி வருகிறார். இதுகுறித்து பேசியுள்ள அவர், எனது வழக்கமான பயிற்சிகளை செய்துக்கொண்டே இருப்பேன். இந்தியாவுக்கு விளையாடுவதற்கு முன்பாகவும் அதை தான் செய்தேன். எந்தவித மாற்றத்தையும் அதில் செய்ததில்லை.

மூன்றே விஷயம் தான்
இந்தியாவுக்காக ஒரு நாள் விளையாடுவேன் எனக்கூறிய போது சக நண்பர்களே சிரித்தனர். ஆனால் எனது நம்பிக்கை பலன் கொடுத்தது. 140 கிமீ வேகத்தில் பந்துவீச வேண்டும், அதனை இரு புறமும் ஸ்விங் செய்ய வேண்டும், பின்னர் நன்கு பேட்டிங் செய்ய வேண்டும். இந்த மூன்றை மட்டும் சரியாக செய்துவிட்டால்,நிச்சயம் இந்திய அணியில் இடம் கிடைக்கும். அதற்காக தான் தற்போது முயன்று வருகிறேன்.

கம்பேக் கொடுப்பேன்
பேட்டிங் என்பது எனக்கு கூடுதல் பலமாகும். கடந்த வருடம் எனக்கு பேட்டிங்கிலும் சில வாய்ப்புகள் கிடைத்ததால் நிரூபித்துக்காட்டினேன். எனவே மறுபடியும் அந்த வாய்ப்புகள் கிடைக்கும் என காத்துள்ளேன். ஹர்திக் பாண்ட்யா 140கிமீ வேகத்தில் வீசுவார், இருபுறமும் ஸ்வின் மற்றும் பேட்டிங்கும் செய்தார். இதனால் தான் அவர் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார். என்னாலும் அதனை செய்ய முடியும். நிச்சயம் ஒருநாள் இடம் பிடிப்பேன் என தீபக் சஹார் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2023
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் மார்ச் முதல் வாரத்தில் பயிற்சி முகாமை தொடங்கவுள்ளது. இதில் தீபக் சஹாரும் தோனியுடன் சேர்ந்து பயிற்சி பெறவிருக்கிறார்.எனவே இந்த ஐபிஎல்- ல் தீபக் சஹார் கம்பேக் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications