தீபக் சாஹரின் மெடிக்கல் ரிப்போர்ட்.. நகம் கடிக்கும் சிஎஸ்கே.. இறுதி முடிவு என்ன??
கொல்கத்தா: ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி அதிகபட்சமாக தீபக் சாஹரை 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.
Recommended Video
இந்த நிலையில, அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது காயம் ஏற்பட்டது.
இதனால் , எஞ்சிய போட்டியிலிருந்து தீபக் சாஹர் பங்கேற்காமல் பெவிலியன் சென்றார். மீண்டும் பந்துவீச வில்லை.

ஐபிஎல் பங்கேற்பு?
இதனால் தீபக் சாஹர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது. இதனால் அவரை 14 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே நிர்வாகம் கலக்கத்தில் இருந்தது. தீபக் சாஹர் மட்டும் தான் அனுபவம் உள்ள பந்துவீச்சாளராக சென்னை அணியில் இருந்தார்

5 வாரங்களுக்கு ஓய்வு
தற்போது அவர் இல்லை என்றால், வேறு ஒரு பந்துவீச்சாளரை தேட வேண்டிய நிலைக்கு சிஎஸ்கே தள்ளப்பட்டது. இந்த நிலையில், தீபக் சாஹரின் மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் தீபக் சாஹருக்கு காலில் ஏற்பட்டுள்ள காயம் குணமடைய குறைந்தது 4 முதல் 5 வாரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடரில் இல்லை
இதன் காரணமாக, தீபக் சாஹர் இலங்கை தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் தீபக் சாஹர் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் முழு உடல் தகுதியை பெற்றுவிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மகிழ்ச்சியான செய்தி
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மகிழ்ச்சியில் உள்ளது. அப்பாடா, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்று பெருமூச்சு விட்டுள்ளனர்.அதிகபட்சமாக தீபக் சார் ஒன்று அல்லது 2 போட்டிகளை தவறவிடலாம். இதனால் சிஎஸ்கே ரசிகர்களுக்கு இருந்த டென்ஷன், தற்போது நீங்கிவிட்டது.


Click it and Unblock the Notifications