
தீபக் சாஹர்
ஆனால், இன்று நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் தீபக் சாஹர் அதிரடியாக நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு அளித்துள்ளார் கேப்டன் ராகுல். தீபக் சாஹருக்கு உண்மையில் காயம் ஏற்பட்டுள்ளதா அல்லது மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்க ஓய்வு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இந்திய அணி விளக்கம் அளிக்கவில்லை.

டாஸ்
இந்த நிலையில், ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ராகுல், பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆடுகளம் முதல் ஒரு மணி நேரத்தில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக ராகுல் குறிப்பிட்டார். 180 மற்றும் 190 ரன்கள் அடிப்பார்கள் என முதல் ஒருநாள் போட்டியில் எதிர்பார்த்தேன்.

கேப்டன்கள் கருத்து
பந்துகொஞ்சம் பழசான பிறகு ஜிம்பாப்வே வீரர்கள் சிறப்பாகவே ரன் சேர்த்தார்கள். இன்றைய ஆட்டத்திலும் விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சி செய்வோம் என்று ராகுல் கூறினார். ஜிம்பாப்வே அணி கேப்டன் ரேஜிஸ் பேசிய போது, முதலில் விக்கெட் விழாமல் தாக்குப் பிடித்தால் பிறகு ரன் சேர்ப்போம் என்று தெரிவித்தார்.

பிளேயிங் லெவன்
1, கேஎல் ராகுல், 2, ஷிகர் தவான், 3, சுப்மான் கில், 4, இஷான் கிஷன், 5, தீபக் ஹூடா, 6, சஞ்சு சாம்சன், 7, அக்சர் பட்டேல், 8, ஷர்துல் தாக்கூர், 9, குல்தீப் யாதவ், 10, முகமது சிராஜ், 11, பிரசித் கிருஷ்ணா


Click it and Unblock the Notifications











